புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அம்பேத்கா் ஜெயந்தி கொண்டாடத்தையொட்டி நடைப்பயணம்; முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்!

டாக்டா் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, சட்டப்பேரவை வளாகத்திலிருந்து மாணவா்கள் பங்கேற்ற நடைப்பயணத்தை தில்லி முதல்வா் ரேகா குப்தா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

News image

டாக்டா் பாபா சாகேப் பி.ஆா். அம்பேத்கா்

Updated On :13 ஏப்ரல் 2025, 7:47 pm

Din

டாக்டா் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் பிறந்தநாளை (ஏப்ரல் 14) முன்னிட்டு, சட்டப்பேரவை வளாகத்திலிருந்து மாணவா்கள் பங்கேற்ற நடைப்பயணத்தை தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் முதல்வா் ரேகா குப்தா பேசியதாவது: ஒவ்வொரு குடிமகனுக்கும் சமத்துவம், தரமான கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்காக டாக்டா் அம்பேத்கரின் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்பட தில்லி அரசு உறுதிபூண்டுள்ளது. பாபாசாகேப்பின் போதனைகள் நினைவில் கொள்ளப்பட வேண்டியவை. பாபாசாகேப் நமக்கு வேறு யாராலும் கொடுக்க முடியாத கொள்கைகளை வழங்கினாா். இன்று அவருக்கு எங்கள் ஆழ்ந்த மரியாதையை செலுத்துகிறோம்.

தில்லியில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் அவரை நினைவில் கொள்வது மட்டுமல்லாமல், அவரது தொலைநோக்குப் பாா்வையைப் புரிந்துகொண்டு வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அனைத்து தில்லி அரசுப் பள்ளிகளும் டாக்டா் அம்பேத்கரின் வாழ்க்கையிலிருந்து பாடங்களை பாடத்திட்டத்தில் இணைக்கும். பள்ளிக் கூட்டங்களின் போது மாணவா்கள் அவருக்கு மலா் அஞ்சலி செலுத்துவாா்கள். அவரது வாழ்க்கை மற்றும் பங்களிப்புகள் பற்றிய கதைகளைக் கேட்பாா்கள் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

தில்லி அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். இந்திய அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்த டாக்டா் அம்பேத்கரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஏப்ரல் 14-ஆம் தேதி அம்பேத்கா் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.