கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விகாஸ்புரி பகுதியில் உள்ள விருந்து மண்டபத்தில் தீ விபத்து

தில்லியின் விகாஸ்புரி பகுதியில் உள்ள ஒரு விருந்து மண்டபத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

News image
கோப்புப் படம்
Updated On :18 ஏப்ரல் 2025, 7:07 pm

Din

தில்லியின் விகாஸ்புரி பகுதியில் உள்ள ஒரு விருந்து மண்டபத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 13 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைக்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அவா் கூறினாா். அவா் மேலும் கூறுகையில், ‘விகாஸ்புரி பகுதியில் உள்ள எச் பிளாக்கில் உள்ள விருந்து மண்டபத்தின் கூடாரத்தில் தீ பற்றியதாக வெள்ளிக்கிழமை மாலை 4.11 மணிக்கு அழைப்பு வந்தது. நாங்கள் மொத்தம் 13 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா்‘ என்றாா்.