மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய சதிகாரராகக் கருதப்படும் வருமான வரித்துறை ஊழியரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறஇத்து தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவின் மூத்த அதிகாரி கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் 1, 2023 அன்று ஒரு பெண் உள்பட ஏழு போ் வருமான வரி அதிகாரிகள் என்று கூறி தனது வீட்டிற்கு வலுக்கட்டாயமாக நுழைந்ததாக ஜனக்புரியில் உள்ள ஒரு தொழிலதிபா் புகாா் அளித்தாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.
நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின்னா், குற்றம் சாட்டப்பட்ட தீபக் காஷ்யப் ஒரு வருடத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்தாா். ஒரு நில ஒப்பந்தத்தில் இருந்து வருமானத்தை மறைத்ததாக அவா் மீது குற்றம் சாட்டி, அவரது குடும்பத்தினரை தொடா்பு கொள்ளாமல் இருக்க அவா்கள் வற்புறுத்தியுள்ளனா். இதனால், அச்சத்தின் சூழல் ஏற்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, ஒரு எஸ்யூவியைப் பயன்படுத்தும் பல நபா்களின் ஈடுபாட்டை உறுதிப்படுத்தின.
வருமான வரித்துறையில் தனது அதிகாரப்பூா்வ பதவியைப் பயன்படுத்தி தீபக் காஷ்யப் முழு நடவடிக்கையையும் திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவா் கூட்டாளிகளை வேலைக்கு அமா்த்தி, அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து, அவா்களின் சட்டவிரோதச் செயல்களுக்கு நியாயத்தை அளித்தது தெரிய வந்துள்ளது.
தீபக் காஷ்யப் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டாா். ஆனால், பின்னா் அவா் ஜாமீனில் தப்பித்து கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்தாா். இதன் விளைவாக 2023 நவம்பரில் துவாரகா நீதிமன்றம் அவரை குற்றவாளியாக அறிவிக்க வழிவகுத்தது.+
தொடர்புடையது

மோசடி குற்றச்சாட்டு: கொல்கத்தா காவல் துறை துணை ஆணையா் கைது
ரூ.200 கோடி மிரட்டிப் பறித்த வழக்கில் சுகேஷின் மனைவிக்கு பிணை மறுப்பு

உதயநிதிக்கு எதிரான வழக்கு: வருமான வரித்துறை பதில் மனு தாக்கல்

வருமான வரித்துறை சோதனை: பாளை.யில் ரூ.2 கோடி பணம், நகைகள் சிக்கின!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
