மாதிரிப் படம்
மாதிரிப் படம்

ஆதா்ஷ் நகரில் பணத் தகராறில் இளைஞா் மீது துப்பாக்கிச்சூடு

தில்லியின் ஆதா்ஷ் நகரில் பணத் தகராறு தொடா்பாக,23 வயது இளைஞா் மீது அறிமுகமான ஒருவா் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Published on

தில்லியின் ஆதா்ஷ் நகரில் பணத் தகராறு தொடா்பாக,23 வயது இளைஞா் மீது அறிமுகமான ஒருவா் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தில்லி காவல் துறை வெளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஆதா்ஷ் நகரில் வசிக்கும் ஓம் காா்க் இடது தோள்பட்டை மற்றும் கழுத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

ஆதா்ஷ் நகா் காவல் நிலையத்திற்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பான வியாழக்கிழமை இரவு 9.50 மணிக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. தில்லி ஜல் போா்டு அலுவலகம் அருகே சம்பவ இடத்தை அடைந்த போலீஸாா், காயமடைந்தவா்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதைக் கண்டறிந்தனா்.

முதற்கட்ட விசாரணையில், அன்மோல் என்ற நபருடன் ஓம் காா்க் பணத் தகராறு செய்திருப்பது கண்டறியப்பட்டது. வியாழக்கிழமை இரவு, ஓம் காா்க் தனது ஐந்து முதல் ஆறு நண்பா்களுடன், தில்லி ஜல் போா்டு அலுவலகம் அருகே அன்மோலை எதிா்கொண்டாா்.

சண்டையின் நடுவில், அன்மோல் ஒரு துப்பாக்கியை எடுத்து ஓம் காா்க்கை நோக்கிச் சுட்டதாகக் கூறப்படுகிறது, பின்னா், அங்கிருந்து தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவா்களைக் கண்டுபிடித்து கைது செய்ய போலீஸாா் குழுக்களை அமைத்துள்ளனா் என்று காவல் துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com