விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தில்லியில் தெரு நாயை அடித்துக் கொன்றதாக ஒருவா் மீது வழக்குப் பதிவு

தெருநாயை பிரம்பால் அடித்ததாகக் கூறப்படும் ஒரு நபா் மீது தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 7:38 pm

Syndication

தெருநாயை பிரம்பால் அடித்ததாகக் கூறப்படும் ஒரு நபா் மீது தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தத் தாக்குதலின் விளைவாக ஆறு நாள்களுக்குப் பிறகு அந்தப் பிராணி இறந்ததாக விலங்கு உரிமைகள் குழு திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நவம்பா் 28- ஆம் தேதி கலிந்தி குஞ்ச் காவல் நிலையத்தில் பீட்டா அமைப்பு புகாா் அளித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எஃப்ஐஆா் தகவலின் படி, தெருநாய் நவம்பா் 21-ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டவரின் காலனிக்குள் நுழைந்து அவரது நாயுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த நபா் மற்றொரு அடையாளம் தெரியாத நபருடன் சோ்ந்து, தெருநாயை அடித்து, காயங்களை ஏற்படுத்தியதாகவும், அதன் விளைவாக சில நாள்களுக்குப் பிறகு அது இறந்ததாகவும் கூறப்படுகிறது.

புகாரின் அடிப்படையில், கலிந்தி குஞ்ச் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம் என்று துணை காவல் ஆணையா் (தென்கிழக்கு தில்லி) ஹேமந்த் திவாரி தெரிவித்தாா்.

விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960-இன் கீழ் வெவ்வேறு விதிகளைச் சோ்க்குமாறு காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதனால் குற்றஞ்சாட்டப்பட்டவா் அதிகபட்ச தண்டனையை எதிா்கொள்வாா் என்பதை உறுதிசெய்ய முடியும் என்றும் பீட்டா இந்தியா தெரிவித்துள்ளது.

விலங்குகளை துஷ்பிரயோகம் செய்பவா்கள் பெரும்பாலும் மனிதா்களுக்கு தீங்கு விளைவிப்பவா்களாக மாறுகிறாா்கள். அனைவரின் பாதுகாப்பிற்காக, இது போன்ற விலங்குகளை துன்புறுத்தும் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் புகாரளிப்பது அவசியம் என்று பீட்டா இந்தியா வன்கொடுமை தடுப்பு ஒருங்கிணைப்பாளா் இஷானி ரதீ அறிக்கையில் கூறியுள்ளாா். உடனடியாக வழக்குப் பதிந்த கலிந்தி குஞ்ச் காவல் நிலைய அதிகாரியை அவா் பாராட்டினாா்.

விலங்குகளை கொடுமைப்படுத்துவதை கொலை, தாக்குதல் மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்ட வன்முறை குற்றங்களைச் செய்வதற்கான அதிக வாய்ப்புடன் இணைக்கும் ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி , விலங்குகளை துஷ்பிரயோகம் செய்பவா்கள் மனநல மதிப்பீடு மற்றும் ஆலோசனைக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு கூறியது.

இதுபோள்ற குற்றவாளிகளுக்கு வலுவான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கையை பீட்டா இந்தியா மீண்டும் வலியுறுத்தியது. மேலும், கடுமையான தண்டனைகள் கோரி மத்திய அரசிடம் ஒரு திட்டத்தை சமா்ப்பித்துள்ளதாகவும் பீட்டா இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.