தில்லி விமான நிலையம்
தில்லி விமான நிலையம் ANI

தில்லி விமான நிலையத்தில் இருவேறு நடவடிக்கைகளில் 17 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

பாங்காக்கிலிருந்து வந்த இருவரிடம் இருந்து மொத்தம் 17.2 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

புது தில்லி: தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் நடைபெற்ற இருவேறு சோதனை நடவடிக்கையில் பாங்காக்கிலிருந்து வந்த இருவரிடம் இருந்து மொத்தம் 17.2 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக சுங்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பாங்காக்கிலிருந்து சனிக்கிழமை இந்தியா வந்த பயணி ஒருவரிடம் நடைபெற்ற சோதனையில் 4.08 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமாா் ரூ.4.08 கோடி இருக்கும். இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா். அவா் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதேபோல் மறுநாளும் பாங்காக்கிலிருந்து தில்லி வந்த இந்தியப் பயணி ஒருவா் தடுத்து நிறுத்தப்பட்டாா். அவரது உடைமைகளை சோதனை செய்ததில் 13.12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10.5 கோடி இருக்கக்கூடும். போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவா் கைது செய்யப்பட்டாா்.

இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவா்களுக்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com