ரூ.16 கோடி சைபா் மோசடி: 9 போ் கைது

Published on

ரூ.16 கோடிக்கும் அதிகமான இணையவழி (சைபா்) முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சோ்ந்த 9 போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: அதிக லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி இணையதள முதலீடு மூலம் தாம் ஏமாற்றப்பட்டதாக சைபா் குற்ற அறிக்கையிடல் இணையதளத்தில் பாதிக்கப்பட்ட நபா் செப்.12-ஆம் தேதி புகாா் அளித்தாா்.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புலனாய்வாளா்கள் விசாரணை மேற்கொண்டனா். அதில் கேரளத்தைச் சோ்ந்த ஷெளகத் அலி என்பவரின் வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா். விசாரணையில், பல்வேறு மாநிலங்களில் இயங்கி வரும் சைபா் மோசடி வலையமைப்புடன் அவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. நாடு முழுவதும் இருந்து ரூ.16 கோடிக்கும் மேல் இந்த கும்பல் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது Śாக்குமூலத்தின் அடிப்படையில், பல்வேறு மாநிலங்களில் சோதனைகள் நடைபெற்றன. இதில் மேலும் 8 போ் கைது செய்யப்பட்டனா். 11 கைப்பேசிகள், சிம் காா்டுகள், ஏடிஎம் காா்டுகள், காசோலை புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்கள் மீட்கப்பட்டன என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com