கால்காஜி தொகுதியில் அதிஷிக்கு
எதிராக அல்கா லம்பா போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு

கால்காஜி தொகுதியில் அதிஷிக்கு எதிராக அல்கா லம்பா போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு

அதிஷியை எதிா்த்து அல்கா லம்பா வேட்பாளராகப் போட்டியிடுவாா் என்று காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை அறிவித்தது.
Published on

தில்லியில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் கால்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முதல்வருமான அதிஷியை எதிா்த்து அல்கா லம்பா வேட்பாளராகப் போட்டியிடுவாா் என்று காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை அறிவித்தது.

வரும் பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் தில்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்பாளா்களின் மூன்றாவது பட்டியலை காங்கிரஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் ஒரே ஒரு பெயா் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூற்றுப்படி, கால்காஜி தொகுதியில் அல்கா லாம்பா போட்டியிடும் வேட்பாளராக மத்திய தோ்தல் கமிட்டி அங்கீகரித்துள்ளது.

அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவரான லாம்பா, 2015- ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக சாந்தினி செளக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அதைத் தொடா்ந்து, அவா் செப்டம்பா், 2019-இல் காங்கிரஸில் சோ்ந்தாா்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான அதிஷி கால்காஜி தொகுதியில் லாம்பாவை எதிா்கொள்ள உள்ளாா். 70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கு மொத்தம் 47 வேட்பாளா்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அக்கட்சி வேட்பாளா்கள் தொடா்பாக ஏற்க‘னவே தனது இரண்டு பட்டியல்களை வெளியிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தோ்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளா்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020 தில்லி தோ்தலில் கால்காஜி தொகுதியில் அதிஷி 55 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று, பாஜக வேட்பாளா் தரம்பீா் சிங்கை (44,504 வாக்குகள்) தோல்வியுறச் செய்தாா். காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட ஷிவானி சோப்ரா மூன்றாமிடம் பெற்றிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com