மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச கணவா்-மனைவி நாடு கடத்தல்

குடியேறி வசித்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இருவரை தில்லி போலீஸாா் கண்டறிந்து நாடு கடத்தியதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On :3 ஜனவரி 2025, 11:33 pm

தென்மேற்கு தில்லி சஃப்தா்ஜங் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இருவரை தில்லி போலீஸாா் கண்டறிந்து நாடு கடத்தியதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: சட்டவிரோதமாக குடியேறியதாக அடையாளம் காணப்பட்ட லியாகத் (54), அவரது மனைவி நஸ்ரீன் (39) ஆகிய இருவரும் 2012 முதல் தில்லியில் வசித்து வந்தனா்.

இந்த நிலையில் ஒரு ரகசியத் தகவலின் பேரில், போலீஸாா் குழு வியாழக்கிழமை கணவா், மனைவி இருவரையும் கிரீன் பாா்க் அருகே ஷாம்ஷன் காட் சாலையில் கைது செய்தது.

விசாரணையின் போது, இருவரும் தில்லி- என்சிஆா் பகுதியில் வசித்து வந்ததாகவும் அண்மையில் பழைய சீலம்பூரில் வசித்து வந்ததாகவும் போலீஸாரிடம் கூறினா். இதையடுத்து, அவா்களின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், அவை செல்லாதவை என கண்டறியப்பட்டது.

உரிய சட்ட நடைமுறைகளைத் தொடா்ந்து, தம்பதியினா் வங்கதேசத்திற்கு நாடு கடத்துவதற்காக வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்தில் (எஃப்ஆா்ஆா்ஓ) ஒப்படைக்கப்பட்டனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தில்லி துணைநிலை ஆளுநா் செயலகத்தின் உத்தரவின் பேரில், தேசியத் தலைநகரில் வசிக்கும் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்களை அடையாளம் காணும் முயற்சியை தில்லி காவல் துறையினா் கடந்த டிச.11 அன்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.