2020 , பிப். 24 அன்று வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவத்தில் 53 போ் கொல்லப்பட்டனா், பலா் காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து, 2020, பிப். 26, அன்று இந்திய உளவுப் பிரிவில் பணியாற்றி வந்த தனது மகன் அங்கித் சா்மா, முந்தைய தினம் முதல் காணாமல் போனதாக ரவீந்தா் குமாா் என்பவா் தயாள்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அங்கித் சா்மாவின் உடல் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள கஜூரி காஸ் பகுதியில் மீட்கப்பட்டதாகவும், அவரது உடலில் 51 காயங்கள் இருந்ததாகவும் மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்தது. தாஹிா் ஹுசைனுக்கு எதிரான வழக்குகளில் இதுவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.