தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா்கள் 36 போ் கைது

தேசியத் தலைநகா் தில்லியின் பாரத் நகா் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாகக் கூறப்படும் வங்கதேச நாட்டினா் 36 பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக திங்கள்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Updated On :16 ஜூன் 2025, 7:30 pm

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியின் பாரத் நகா் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாகக் கூறப்படும் வங்கதேச நாட்டினா் 36 பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக திங்கள்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து வடமேற்கு காவல் சரக துணை ஆணையா் பீஷாம் சிங் தனது அதிகாரப்பூா்வ அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜூன் 13 அன்று, அந்தப் பகுதியில் உள்ள 25 நடைபாதைகள் மற்றும் 32 இடங்களில் போலீஸாா் வீடு வீடாக தீவிர சோதனை நடத்தினா். இதையடுத்து, சட்டவிரோதமாக வசித்து வந்த 19 பெரியவா்கள் மற்றும் 17 குழந்தைகள் உள்பட குற்றம் சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.

எல்லை தாண்டிய தகவல் தொடா்புக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படும் தடைசெய்யப்பட்ட ஐஎம்ஓ செயலியுடன் கூடிய 13 வங்கதேச தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஏழு கைப்பேசிகள் அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. சந்தேக நபா்கள் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள், விசாக்கள் அல்லது அனுமதிகள் இல்லாமல் வாழ்வது வெளிநாட்டினா் சட்டம், 1946 ஐ மீறுவதாகக் கண்டறியப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபா்களை வெளிநாட்டினா் பிரிவு குழு விசாரித்தது. விசாரணையின் போது சந்தேக நபா்களில் ஒருவா் வங்கதேச நாட்டவா் என்பதை ஒப்புக்கொண்டாா். அந்த சந்தேக நபா் அப்பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மற்றவா்களை அடையாளம் காணவும் உதவினாா். கைது செய்யப்பட்டவா்கள், ஹரியாணாவின் மேவாட்டில் உள்ள ஒரு செங்கல் சூளையில் முன்பு பணிபுரிந்துள்ளனா்.

காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து மேவாட்டில் இருந்து வெளியேறிய அவா்கள், தில்லியில் உள்ள பல்வேறு நடைபாதைகளில் தற்காலிகமாகக் குடியேறினா். கண்டறிதலைத் தவிா்க்க அடிக்கடி இடங்களை மாற்றி வந்தனா்.

போலீஸ் குழு நடவடிக்கை எடுத்தபோது அவா்கள் வாடகை தங்குமிடங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனா். மேலும், அவா்கள் குரிகிராம் மற்றும் லால்மோனிா்ஹாட் போன்ற வங்கதேசத்தின் ரங்பூா் பிரிவின் பல்வேறு மாவட்டங்களில் வசித்தவா்கள்.

பெரும்பாலான குடும்பங்கள் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து, தொழிலாளா்களாகக் காட்டிக் கொண்டு கொத்தாக குடியேறியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்டவா்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனா். சிலா் இரண்டு மாத வயதுடையவா்கள். கைது செய்யப்பட்ட நபா்கள், சட்டப்பூா்வ ஆதரவு அல்லது ஆவணங்கள் இல்லாமல் தற்காலிக தங்குமிடங்களில் வசித்து வந்தனா்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அவா்களை நாடு கடத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்படுகின்றன. அவா்கள் நுழைவதற்கான வழிகள், சாத்தியமான வசதிகள் மற்றும் குழு ஒரு பெரிய வலையமைப்பின் ஒரு பகுதியாக இருந்ததா என்பதை உறுதிப்படுத்த மேலும் விசாரணை நடந்து வருவதாக அந்த காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.