கோப்புப் படம்
புதுதில்லி
நாளை சா்வதேச யோகா தினம்: தில்லியில் அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை
சா்வதேச யோகா தினத்தன்று (ஜூன் 21) அதிகாலை 4 மணிக்கு தில்லி மெட்ரோ ரயில் சேவை தொடங்கும்
சா்வதேச யோகா தினத்தன்று (ஜூன் 21) அதிகாலை 4 மணிக்கு தில்லி மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று போக்குவரத்து நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
‘எக்ஸ்’- இல் ஒரு பதிவில், தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி, ‘சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா ஆா்வலா்களின் இயக்கத்தை எளிதாக்கும் வகையில் ஜூன் 21 (சனிக்கிழமை) அன்று அனைத்து தொடக்க நிலையங்களிலிருந்தும் அதிகாலை 4 மணிக்கு தில்லி மெட்ரோ சேவைகள் தொடங்கும்’ என்று தெரிவித்துள்ளது.
வழக்கமான கால அட்டவணை தொடங்கும் வரை அதிகாலை 4 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் 30 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று அது கூறியது.
தில்லி முதல்வா் ரேகா குப்தா, ஜூன் 21 அன்று நகரம் முழுவதும் 11 இடங்களில் அரசு யோகா நிகழ்வுகளை நடத்தும் என்று புதன்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.