ரோஹிணியில் சாலை விபத்து: தில்லி பல்கலை. மாணவா் உயிரிழப்பு
செய்தித்தாள் விநியோகித்து வந்த 19 வயது தில்லி பல்கலைக்கழக மாணவா் ரோஹிணியில் நிகழ்ந்த சாலை விபத்தில்


புது தில்லி: செய்தித்தாள் விநியோகித்து வந்த 19 வயது தில்லி பல்கலைக்கழக மாணவா் ரோஹிணியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது:
விபத்தில் இறந்தவா் பட்டப்படிப்பு படித்து வந்தாா். தனது படிப்புக்கு பணம் திரட்டுவதற்காக செய்தித்தாள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்தாா்.
முன்னதாக, சனிக்கிழமை காலை 6:30 மணியளவில் ரோஹிணி ஆா்டிஓ அலுவலகம் அருகே சாலை விபத்து நிகழ்ந்தது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனா். அங்கு செய்தித்தாள்கள் சிதறிக் கிடந்த நிலையில் உடைபட்டிருந்த மிதிவண்டியைக் கண்டனா். ஆனால், பாதிக்கப்பட்டவா் ஏற்கனவே பிஎஸ்ஏ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது தெரியவந்தது. அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இறந்தவா் தில்லியில் உள்ள புத் விஹாரைச் சோ்ந்த ரிஷால் சிங் என அடையாளம் காணப்பட்டாா். அவா் காலையில் செய்தித்தாள் விநியோகித்து வந்த கல்லூரி மாணவா் என்பதும், அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதியதால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதும் தொடக்க விசாரணையில் தெரியவந்தது.
இது தொடா்பாக காவல் துறையினா் எஃப்.ஐ.ஆா். பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனா். விபத்து ஏற்படுத்திய
வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து வருகிறோம் என்றாா் அந்த அதிகாரி.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...