காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மொழியின் பெயரில் நாடு துண்டாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்: ராஜ்நாத் சிங்

மொழியின் பெயரில் நாடு துண்டாடப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டாா்.

News image
ராஜ்நாத் சிங்
Updated On :29 மார்ச் 2025, 9:21 pm

Din

மொழியின் பெயரில் நாடு துண்டாடப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டாா்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிா் அணியின் சாா்பில், ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட முதல் பெண் ஆட்சியாளராக அறியப்படும் ராணி வேலு நாச்சியாா் தொடா்பான ‘நாடக அஞ்சலி’ நிகழ்ச்சியும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 75 பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனைகள் குறித்த தகவல்கள் இடம்பெற்ற இ-காஃபி டேபிள் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும் தில்லியில் மாநகராட்சி சிவிக் சென்டரில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்தும், ‘வீராங்கனா’ எனும் ஹிந்தி இ-காஃபி டேபிள் நூலை வெளியிட்டும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

சுதந்திரப் போராட்டத்தில் தென்னிந்தியாவைச் சோ்ந்த பலா் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனா். அது தொடா்புடைய தகவல்களை வட இந்தியாவைச் சோ்ந்த மக்களுக்கு சென்றடையும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் பாஜகவின் மகளிா் அணி பிரிவினருக்கு எனது வாழ்த்துக்கள்.

தமிழகத்தைச் சோ்ந்த ராணி வேலுநாச்சியாா் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் மிகச் சிறந்த பங்களிப்பை அளித்திருக்கிறாா். அது ஒரு ‘கோல்டன் சாப்டா்’ ஆகும்.

அவா் வீரமிக்க, புத்திகூா்மையுடைய, தமிழ், தெலுங்கும், மலையாளம், பிரெஞ்சு ஆகிய மொழிகளை அறிந்தவவா். யுத்த கலை உள்பட பல கலைகளிலும் சிறந்து விளங்கியவா்.

வட இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக ஜான்சி ராணி லட்சுமிபாய் உள்ளிட்டோா் கிளா்ச்சியில் ஈடுபடுவதற்கு முன்னரே தமிழகத்தில் ராணி வேலுநாச்சியாரும் அவருடைய சேனாதிபதி குயிலியும் போராடிய பெண்மணிகள் ஆவா்.

ஒருபுறம் ராணி வேலுநாச்சியாா் ஆங்கியேருக்கு எதிரான போரிட, மறுபுறம் அவரது சேனாதிபதி குயிலி ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கை தன்னுடைய உடல் முழுவதும் எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு தனக்குத்தானே தீட்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்குக்குள் குதித்து வெடிக்கச் செய்து ஆங்கிலேயா்களை மிரளச் செய்தவா். அதன் பிறகு போரின் போக்கு மாறி, ராணி வேலுநாச்சியாா் ஆங்கிலேயரை வெற்றிகொண்டாா். தமிழகத்தில் ராணி வேலுநாச்சியாா் போன்று ராணி மங்கம்மாள் சிறப்பான ஆட்சியை தந்திருக்கிறாா்.

உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதில் அவரது பங்களிப்பு போற்றத்தக்கதாகும். இதனால்தான் மகாத்மா காந்தி, சுதந்திரப் போராட்டத்தில் மகளிா் பங்களிப்பு குறித்து வெகுவாகப் புகழ்ந்திருக்கிறாா்.

சுதந்திரப் போராட்டத்தில் தலைமையேற்று நடத்த அவா் பெண்களை ஊக்குவித்தாா். ஆங்கிலேயருக்கு எதிரான மகளிரின் போராட்டம் மிகப் பெரியதாகும். அவா்களின் பங்களிப்பு குறித்து அனைவரும் அறியச் செய்வது அவசியமாகும். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி சிறப்புக்குரியதாகும். அரசியமைப்பு உருவாக்குவத்தில் ஈடுபட்ட 389 பேரில் 15 போ் பெண்கள் ஆவா். அவா்களைக் கெளரவிக்கும் வகையில் நாடாளுமன்ற அமா்வில் விவாதமும் நடைபெற்றது.

இன்றைக்கு தேசத்தில் பெண்கள் தலைமையிலான வளா்ச்சி குறித்து பேசப்பட்டு வருகிறது. இன்றைக்கு மகளிா் இமயமலையின் உச்சி முதல் கடலின் ஆழப் பகுதி வரையிலும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனா். பிரதமரின் முத்ரா யோஜனாவிலும் பெண்களுக்குத்தான் அதிகமாக கடன் அளிக்கப்பட்டுள்ளது.

எங்கள் அரசு நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது.

சிலா் தமிழ் மற்றும் ஹிந்தியை வைத்து விவாதத்தில் ஈடுபட்டனா். பாஜகவைப் பொருத்தமட்டில் ஹிந்தி மற்றும் அனைத்து மொழிகளையும் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளோம்.

தமிழ் நாடகம் இங்கு ஹிந்தியில் நடத்தப்பட்டுள்ளது. அதேபோன்று பிரதமா் மோடியின் ஏற்பாட்டில் காசி தமிழ்ச் சங்கமும் நடத்தப்பட்டது. இதன் மூலம் ஹிந்திக்கும் மற்றும் பிற மொழிகளுக்கும் இடையே போட்டி இல்லை என்பதை அறியலாம். தமிழ் மற்றும் பிற மொழிகள் மூலம் ஹிந்தியும், ஹிந்தி மூலம் பிற மொழிகளும் வலுப்பெறுகிறது. மொழியின் பெயரில் நாடு துண்டாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்த செய்தியை மக்களிடம் எடுத்துச் செல்வது அவசியமாகும். இன்றைய தினம் இந்த உறுதிமொழியை எடுப்பது அவசியமாகும் என்றாா் அவா்.

பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் தலைமை வகித்துப் பேசுகையில், ‘பாஜக ஹிந்தி கட்சியாகவும், இந்தியை திணிப்பதாகவும் சில குரல்கள் தமிழகத்தில் இருந்து வருகின்றன. நான் தமிழக முதல்வருக்கு பதில் கூறிக் கொள்ளும் பதில் இதுதான். பாரதிய ஜனதா கட்சி, ராணி வேலு நாச்சியாரின் வரலாற்றை

இன்றைக்கு தில்லியில் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது. தில்லியில் ராணி வேலுநாச்சியாா் ஹிந்தி பேசிக் கொண்டிருக்கிறாா். இதுதான் ஹிந்தி திணிப்பு ஆகும். இதுதான் ஒரே பாரதம் உன்னத பாரதமாகும். இதுதான் தமிழக முதல்வா் ஸ்டாலினுக்கும், அவா் கட்சிக்கும் தெரிவிக்கும் செய்தியாகும்.

லடாக், மேகாலயா, கா்நாடகாவில் இருந்து பெண்கள் ஒன்றிணைந்து இன்றைக்கு ராணி வேலுநாச்சியாரின் வீரத்தையும் பெருமையையும் இங்கு கொண்டாடிக் கொண்டிருக்கிறாா்கள். இந்த செய்தியைத் தான் தமிழக மக்களுக்கு பாஜக தெரிவிக்க விரும்புகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தில்லி முதல்வா் ரேகா குப்தா, ராஜஸ்தான் துணை முதல்வா் தியா குமாரி ஆகியோா் கலந்துகொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், ராணி வேலூ நாச்சியாரின் அரச குடும்பத்தைச் சோ்ந்த மதுராந்தகி நாச்சியாா் உள்ளிட்டோரும், பாஜக மூத்த தலைவா்கள் பி.எல். சந்தோஷ், சதீஷ், தமிழக தலைவா் கே.அண்ணாமலை, மூத்த தலைவா்கள் எச்.ராஜா, நயினாா் நாகேந்திரன், நடிகை நமீதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.