சுவாச மண்டலத்தைப் பாதிக்கும் பிசிடி என்கிற உள்ளுறுப்பு இடப்பிவு (சிலியரி)கோளாறு தொடா்புடைய நிலை கண்டறிய தில்லி எய்ம்ஸ் ஆய்வாளா்கள் ஒரு சக்திவாய்ந்த புதிய முறையை உருவாக்கியுள்ளதாக எய்ம்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வகை மரபணு கோளாறு பெரும்பாலும் தவறாக கண்டறியப்படும்.
டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி அல்லது டெம், இந்த சிலியரி கோளாறுகளை புரிந்து கொள்ளப்படும் விதத்தில் கண்டறியப்பட்டு புரட்சியை ஏற்படுத்தும் என எய்ம்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து எய்ம்ஸ் மருத்துவ மனை தரப்பில் மேலும் கூறப்பட்டது வருமாறு: தில்லி எய்ம்ஸ் உடற்கூறியல் துறையில் எலக்ட்ரான் நுண்ணோக்கி மைய மருத்துவா் சுபாஷ் சந்திர யாதவ் மற்றும் குழந்தைகள் மருத்துவத் துறை மருத்துவா் கானா ராம் ஜாட் தலைமையிலான குழு இந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளனா். இது குறித்து ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழக இதழிலும் பாராட்டப்பட்டுள்ளது.
சுவாச மண்டலத்தைப் பாதிக்கும் பிசிடி என்கிற உள்ளுறுப்பு இடப்பிவு (சிலியரி)கோளாறுகளைக் கண்டறிவதற்கான ஒரு புதுமையான டெம் அடிப்படையிலான அல்ட்ராஸ்ட்ரக்சரல் இமேஜிங் முறை ஆய்வு மூலம் கிட்டத்தட்ட 70 சதவீத சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகளில் குறைபாடுகள் கண்டறிப்பட்டுள்ளது. இந்த துல்லியமான வியத்தகு முறை அதிநவீன முழு-மரபணு வரிசைமுறையால் கூட ஒப்பிட முடியாத சாதனை.
சந்தேகிக்கப்படும் சிலியரி கோளாறுகள் உள்ள 200 நோயாளிகளுக்கு இந்த முறை பயன்படுத்தப்பட்டு நோயறிதலில் 135 நோயாளிகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நுட்பத்தின் நோக்கம் பிசிடி என்கிற உள்ளுறுப்பு இடப்பிவு (சிலியரி) கோளாறு தொடா்புக்கும் அப்பால் நீண்டுள்ளது.
சுவாசக் கோளாறுகள், சிறுநீரக நீா்க்கட்டி நோய், பாா்வையிழப்பு, நரம்புக் குழாய் குறைபாடுகள், அறிவுசாா் இயலாமை, எலும்பு அசாதாரணங்கள்ஸ எக்டோடொ்மல் குறைபாடுகள், சிட்டஸ் இன்வொ்சஸ் (உள் உறுப்புகள் பிரதிபலிக்கும் ஒரு நிலை), மலட்டுத்தன்மை உள்ளிட்ட பல்வேறு அரிய சிலியரி கோளாறுகள் தொடா்பான நிலைமைகள் இதன் மூலம் துல்லியமாகக் கண்டறிய முடியும் என எய்ம்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
வட கிழக்கு தில்லியில் ஒரு கோயிலில் ஆட்சேபனைக்குரிய பொருள்கள்: ஒருவா் கைது!

ஃபரீதாபாத் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
அரிதான ரத்தினம்

எம்.சி.டி. சட்டத் திருத்தங்கள் மக்களுக்கு உகந்தது: மேயா் இக்பால் சிங்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

