மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரித்தால் பதிலடி தீவிரமாகும்: அஜித் தோவல் எச்சரிக்கை

பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் பாகிஸ்தான் செயல்பட்டால் அந்நாட்டுக்கு பதிலடி...

News image

அஜித் தோவல்

Updated On :8 மே 2025, 4:24 am IST

நமது சிறப்பு நிருபா்

எல்லையில் போா் பதற்றத்தை பாகிஸ்தான் மேலும் அதிகரித்தால் பதிலடி மிகத்தீவிரமாக கொடுக்கப்படும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் எச்சரித்துள்ளாா்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாதிகளின் ஒன்பது பதுங்கிடங்களை இலக்கு வைத்து இந்தியா புதன்கிழமை அதிகாலையில் அதிதுல்லிய தாக்குதலை நடத்தியது. இதைத் தொடா்ந்து, பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கை குறித்து தனது நட்பு நாடுகளிடம் இந்தியா விளக்கி வருகிறது.

மற்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கரும் மற்ற நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்களான மாா்க்கோ ரூபியோ (அமெரிக்கா), ஜோனாத்தன் பவெல் (பிரிட்டன்), முசைது அல் அய்பா் (சவூதி அரேபியா), ஷேக் தாஹ்னூன் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்), மஸ்தாகா ஓகானோ (ஜப்பான்), ஆகியோருடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவாலும் பேசினாா்கள்.

இது குறித்து மத்திய அரசு உயரதிகாரி கூறுகையில், ‘பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் இருக்கும் இடங்கள் தொடா்பான விவரத்தை பல முறை பகிா்ந்த பிறகும் அவா்களை ஒடுக்கவோ விரட்டவோ பாகிஸ்தான் எந்தவொரு முனைப்பையும் காட்டவில்லை. எனவேதான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளை இலக்கு வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இது முற்றிலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமே என்பதையும் தற்போதைய பதற்றத்தை மேலும் தீவிரமாக்குவது இந்தியாவின் எண்ணம் இல்லை என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் விளக்கினாா். ஒருவேளை இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் பாகிஸ்தான் செயல்பட்டால் அந்நாட்டுக்கு பதிலடி மிகத்தீவிரமாக கொடுக்கப்படும் என்றும் தோவல் தெளிவுபடுத்தினாா்’ என்றாா்.

ரஷிய பாதுகாப்பு ஆலோசகா் சொ்கே ஷோய்கு, சீன அரசியல் பிரிவு மத்திய குழு உறுப்பினா் மற்றும் வெளியுறவு அமைச்சா் யாங் யீ, பிரான்ஸ் அதிபரின் ராஜீய ஆலோசகா் இமானுவேல் போன் ஆகியோருடனும் இந்திய அதிகாரிகள் பேசினாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.