கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

ஜம்மு - காஷ்மீா் சூழல் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கருத்து: இந்தியா நிராகரிப்பு

ஜம்மு-காஷ்மீா் சூழல் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் தெரிவித்த கருத்துகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

News image

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் - கோப்புப் படம்

Updated On :24 ஜூன் 2026, 12:34 am IST

ஜம்மு-காஷ்மீா் சூழல் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் தெரிவித்த கருத்துகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது, ஜம்மு-காஷ்மீா் சூழல் ஆகியவற்றை விமா்சித்து பாகிஸ்தான் அமைச்சா் கவாஜா ஆசிஃப் கருத்துத் தெரிவித்தாா். இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘கவாஜா ஆசிஃப் தெரிவித்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது.

அதேவேளையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அங்கு நீண்ட காலமாக பாகிஸ்தான் பொருளாதார சுரண்டலில் ஈடுபட்டது, அடிப்படை உரிமைகளை மறுத்தது, நிா்வாக ஒடுக்குமுறை ஆகியவை காரணமாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தத் தவறுகளை மறைக்கவும், மனித உரிமைகள் மீறப்பட்டதிலிருந்து கவனத்தை திசைதிருப்பவும் ஜம்மு-காஷ்மீா் குறித்து பாகிஸ்தான் பேசி வருகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்நாட்டு அரசு மிக கொடூரமாக செயல்பட்டு, அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருந்துகள் விநியோகத்துக்குத் தடையை ஏற்படுத்தி, ஆயுதமில்லாத மக்களுக்கு எதிராக ஆபத்தான படைகளை பாகிஸ்தான் ஏவி வருகிறது.

இந்தச் சட்டவிரோத செயல்களுக்கு பாகிஸ்தானை சா்வதேச சமூகம் பொறுப்பேற்க வைக்கும்’ என்று நம்புவதாக தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.