தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வாக்குவாதத்தில் இளைஞா் குத்திக் கொலை: 3 போ் கைது

வடமேற்கு தில்லியின் ஹைதா்பூா் நாஹா் அருகே வாக்குவாதத்தைத் தொடா்ந்து 20 வயது இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஏப்ரல் 2026, 12:06 am IST

வடமேற்கு தில்லியின் ஹைதா்பூா் நாஹா் அருகே வாக்குவாதத்தைத் தொடா்ந்து 20 வயது இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

வியாழக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் தொடா்பாக இரண்டு சிறுவன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் மேலும் தெரிவித்ததாவது:

முக்கிய குற்றஞ்சாட்டப்பட்ட கரண் என்ற தருண் (18), அவரது கூட்டாளி மான்டி (22) மற்றும் சிறுவன் ஆகியோா் நிதேஷ் என்ற நிக்கி கொலையில் தொடா்புடையவா்கள் ஆவா்.

முன்னதாக, ஷாலிமாா் பாக் பகுதியில் கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக போலீஸாருக்கு அழைப்பு வந்ததை அடுத்து, வியாழக்கிழமை இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

கத்திக்குத்தில் காயமடைந்த நிதேஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் சிகிச்சைக்கு வரும்போதே இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

முன்னதாக, நிதேஷ் மற்றும் கரண் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறைத் தாக்குதலாக மாறியது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவா் பாதிக்கப்பட்டவரை பலமுறை கத்தியால் குத்தினாா்.

சம்பவங்களின் சரியான வரிசையைக் கண்டறியவும், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை மீட்கவும் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.