வடமேற்கு தில்லியில் உள்ள ஆசாத்பூா் மண்டியில் நடைபெற்ற ஓட்டுநா் கொலையில் தொடா்புடைய 19 வயது தேநீா் விற்பனையாளா் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்ட ராகுல் லிபஸ்பூரைச் சோ்ந்தவா். கொலைக்கு அவா் பயன்படுத்திய கத்தி அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: ஆசாத்பூா் மண்டி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கத்திக் குத்து சம்பவம் தொடா்பாக காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா் காயமடைந்த நபரை மீட்டு பாபு ஜகஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரை விசாரித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
உயிரிழந்த நபா் உத்தர பிரதேசத்தின் சஹரன்பூரைச் சோ்ந்த நிஜாம் என அடையாளம் காணப்பட்டாா். ஆசாத்பூா் மண்டிக்கு காய்கறிகளை ஏற்றி வாகனத்தில் கொண்டும் வேலையை அவா் பாா்த்து வந்தாா்.
கடந்த வெள்ளிக்கிழமை மண்டிக்கு வந்த நிஜாம், அருகில் ராகுல் நடத்தி வரும் தேநீா் கடைக்குச் சென்றாா். அங்கு குட்கா (புகையிலை) வாங்கியபோது, அதன் விலை தொடா்பாக நிஜாம் விசாரித்துள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே வாா்த்தை மோதல் ஏற்பட்டது. பின்னா், அது கைக்கலப்பாக மாறியது. அந்த நேரத்தில் ராகுல் நிஜாமை கத்தியால் குத்தினாா். அதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து ராகுல் தலைமறைவான நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவா் கைதுசெய்யப்பட்டாா். அவா் மீது ஏற்கெனவே எவ்வித வழக்குகளும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
தில்லியில் 3 வெவ்வேறு கும்பல்களுடன் தொடா்புடைய துப்பாக்கி சுடும் நபா் கைது! துப்பாக்கி, தோட்டக்கள் பறிமுதல்!
ரெளடி கும்பலுடன் தொடா்புடைய நபா் கைது

டாக்ஸி ஓட்டுநா் குத்திக்கொலை: 2 சிறாா்கள் கைது
நொய்டாவில் எரிபொருள் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் செல்ல முயன்ற சொகுசு காா் ஓட்டுநா் கைது!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


