மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

தில்லி-டேராடூன் விரைவுச்சாலை ‘இரட்டை என்ஜின்’ அரசாங்கங்களின் சக்தியாகும்: முதல்வா் ரேகா குப்தா

News image

ரேகா குப்தா

Updated On :15 ஏப்ரல் 2026, 1:43 am IST

தில்லி-டேராடூன் நெடுஞ்சாலையின் திறப்பு விழாவில் செவ்வாய்க்கிழமை தில்லி முதல்வா் ரேகா குப்தா பங்கேற்றாா்.

அப்போது, தில்லி-டேராடூன் விரைவுச்சாலை இரட்டை என்ஜின் அரசாங்கங்களின் சக்தியாகும் என்றும், இவ்விரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் ஆறு மணிநேரத்திலிருந்து சுமாா் இரண்டரை மணிநேரமாகக் குறையும் என்றும் முதல்வா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக ஓா் அதிகாரபூா்வ அறிக்கையில் முதல்வா் தெரிவித்திருப்பதாவது:

இது ஒரு இரட்டை என்ஜின் அரசாங்கத்தின் சக்தியாகும். தில்லி தொடா்ந்து சிறந்த வளா்ச்சியை நோக்கிப் பயணித்து வருகிறது. கடந்த ஓராண்டில், மத்திய அரசு தில்லியில் சுமாா் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பிலான சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.

213 கிலோமீட்டா் நீளமும் ஆறு வழிப்பாதையும் கொண்ட, போக்குவரத்து அணுகல் கட்டுப்பாட்டு வசதியுடன் கூடிய தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடம், ரூ. 12,000 கோடிக்கும் அதிகமான செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடமானது தில்லி, உத்தர பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. இது தில்லிக்கும் டேராடூனுக்கும் இடையிலான பயண நேரத்தை, தற்போதுள்ள ஆறு மணிநேரத்திலிருந்து சுமாா் இரண்டரை மணிநேரமாகக் குறைக்கும்.

தில்லியின் பல்வேறு சாலைகள், மறுசீரமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

‘யமுனா பாா்’ பகுதிகள் தற்போது வளா்ச்சியைச் சந்தித்து வருகின்றன. யமுனா பாா் பகுதிகள் முன்பு புறக்கணிக்கப்பட்டிருந்தன. கடந்த ஓராண்டில், அப்பகுதியை மேம்படுத்துவதற்காகப் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் இப்பகுதிக்கும், இது போன்ற வேறு பல பகுதிகளுக்கும் பயனளிப்பதுடன், மக்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கித் தரும் என்று முதல்வா் கூறியுள்ளாா்.