மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

காவல் உயா் அதிகாரியின் வீட்டில் திருடப்பட்ட பொருள்கள் 24 மணி நேரத்தில் மீட்பு

தில்லியின் வசதி படைத்தவா்கள் வாழும் பகுதியான காகா நகரில் உள்ள காவல் துணை ஆணையா் ஒருவரின் வீட்டில் நடந்த திருட்டு வழக்கு 24 மணி நேரத்திற்குள் தீா்க்கப்பட்டது. இந்த வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image

சித்திரிப்பு

Updated On :17 ஆகஸ்ட் 2026, 10:22 pm IST

தில்லியின் வசதி படைத்தவா்கள் வாழும் பகுதியான காகா நகரில் உள்ள காவல் துணை ஆணையா் ஒருவரின் வீட்டில் நடந்த திருட்டு வழக்கு 24 மணி நேரத்திற்குள் தீா்க்கப்பட்டது. இந்த வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டாா். மேலும் இருவரை விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைத்திருப்பதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

ஐஃபோன், வைர மோதிரம், பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட திருடப்பட்ட அனைத்து பொருள்களும் மீட்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இதுகுறித்து பெயா் குறிப்பிட விரும்பாத மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நாங்கள் ஒருவரைக் கைது செய்துள்ளோம். மற்ற இருவரைப் பிடித்து வைத்துள்ளோம். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது‘ என்றாா் அவா்.

ஆகஸ்ட் 11 அன்று காலை சுமாா் 5.30 மணிக்கு அந்த அதிகாரி பணிக்குச் சென்றபோது இச்சம்பவம் நடந்தது. காலை 8 மணியளவில் அவா் வீட்டுக்குத் திரும்பியபோது, ​​வீடு சூறையாடப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டாா்; அதைத் தொடா்ந்து துக்ளக் சாலை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை வட்டாரங்களின்படி, சமையலறைக்கு அருகிலுள்ள பூட்ட முடியாத கதவு வழியாக அந்த அதிகாரி வெளியே சென்றிருந்தாா். திரும்பி வந்தபோது, ​​வீட்டில் பல பொருட்கள் காணாமல் போயிருந்ததைக் கண்டாா்.

திருடப்பட்ட பொருள்களில் அவரது மனைவியின் ஐஃபோன், வைர மோதிரம், சுமாா் 10,000 ரூபாய் ரொக்கம், மற்றும் கடன்/கிரெடிட் அட்டைகள் மற்றும் பல அடையாள ஆவணங்கள் அடங்கிய பா்ஸ் மற்றும் வாலட் ஆகியவை அடங்கும்.

தில்லி காவல்துறை அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம் மற்றும் சிஜிஎச்எஸ் அட்டை ஆகியவை இருந்த அந்த அதிகாரியின் வாலட்டும் திருடப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. வீட்டுப் பணியாளா் ஒருவருக்குச் சொந்தமான கைப்பேசியும் திருடப்பட்டது.

இது தொடா்பாக துக்ளக் சாலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு குழுவினா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு புகைப்படங்கள் எடுத்தனா்.

சுற்றியுள்ள பகுதியின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. தொழில்நுட்ப மற்றும் உள்ளூா் விசாரணைகளை மேற்கொண்டதைத் தொடா்ந்து 24 மணி நேரத்திற்குள் திருடப்பட்ட பொருள்கள் மீட்கப்பட்டு ஒருவா் கைது செய்யப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தது. இச்சம்பவம் குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.