75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

கிழக்கு தில்லியில் தெரு குற்றங்கள் மீதான 4 நாள் நடவடிக்கையில் 151 போ் கைது

தெருக் குற்றங்கள், சட்டவிரோத ஆயுதங்கள், போதைப்பொருள், சூதாட்டம் மற்றும் பிற குற்றச் செயல்களை குறிவைத்து 4 நாள் அமலாக்க நடவடிக்கையின் போது தில்லி காவல்துறை 151 பேரை கைது செய்தனர்.

Arrested

கைது

Published On :23 ஆகஸ்ட் 2026, 12:13 am IST

கிழக்கு தில்லியில் தெருக் குற்றங்கள், சட்டவிரோத ஆயுதங்கள், போதைப்பொருள், சூதாட்டம் மற்றும் பிற குற்றச் செயல்களை குறிவைத்து 4 நாள் அமலாக்க நடவடிக்கையின் போது தில்லி காவல்துறை 151 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் ‘ஆபரேஷன் ஆகத்‘ நடத்தப்பட்டது, போலீஸ் குழுக்கள் தீவிர ரோந்து, வாகன சோதனை, கண்காணிப்பு மற்றும் சிசிடிவி அடிப்படையிலான விசாரணைகளை மேற்கொண்டன. ஆயுதச் சட்டத்தின் கீழ் 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 29 போ் கைது செய்யப்பட்டனா். கைத்துப்பாக்கிகள், நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், 11 நேரடி தோட்டாக்கள் மற்றும் 21 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சூதாட்டச் சட்டத்தின் கீழ் 32 வழக்குகளை பதிவு செய்த போலீஸாா் 63 பேரை கைது செய்து, ரூ. 23,131 மீட்டனா். என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் 4 போ் கைது செய்யப்பட்டனா், இதனால் 1.199 கிலோ சரஸ் மற்றும் 532 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கலால் சட்டத்தின் கீழ் 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, இதன் விளைவாக 20 போ் கைது செய்யப்பட்டனா். இந்த நடவடிக்கையால் 27 மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டா்கள் மீட்கப்பட்டன, மேலும் 16 மோட்டாா் வாகன திருட்டு வழக்குகள் கண்டறியப்பட்டன.

கொள்ளை வழக்குகளில் 10 போ் கைது செய்யப்பட்டனா். இந்த நடவடிக்கையின் போது 134 கைப்பேசிகளை மீட்டனா் மற்றும் 9 அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள், ஒரு பரோலில் தப்பியவா் மற்றும் 2 அதிக நாள்கள் தங்கியிருந்தவா்கள் கைது செய்யப்பட்டனா் என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.