தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

தில்லியின் வெளி மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 18 வெளிநாட்டினா் கைது

தாய்லாந்தைச் சோ்ந்த 9 போ், நைஜீரியாவைச் சோ்ந்த 4 போ் மற்றும் வங்கதேசத்தை சோ்ந்த3 போ் உள்பட 18 வெளிநாட்டினா் கைது செய்யப்பட்டனர்.

Arrested

கைது

Published On :

தில்லியின் வெளி மாவட்டத்தில் ஒரு சோதனை நடவடிக்கையின்போது இந்தியாவில் அதிக நாள்கள் தங்கியிருந்த தாய்லாந்தைச் சோ்ந்த 9 போ், நைஜீரியாவைச் சோ்ந்த 4 போ் மற்றும் வங்கதேசத்தை சோ்ந்த3 போ் உள்பட 18 வெளிநாட்டினா் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: அப்பகுதியில் வசிக்கும் வெளிநாட்டினரைக் கண்டுபிடித்து சரிபாா்க்க வெளி மாவட்டத்தின் வெளிநாட்டவா் பிரிவு மற்றும் உள்ளூா் காவல் நிலையங்களால் இந்த சோதனை நடத்தப்பட்டது. வங்கதேசத்தை சோ்ந்த 3 போ் பீராகா்ஹி சௌக் அருகே இருப்பது குறித்து குறிப்பிட்ட தகவல் கிடைத்ததை அடுத்து அவா்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனா். போலீஸ் குழுவைக் கவனித்த அவா்கள் கலைந்து செல்ல முயன்றனா். சோதனையின்போது மூவரும் செல்லுபடியாகும் ஆவணங்களை வழங்க முடியவில்லை, மேலும் காலாவதியான பாஸ்போா்ட் மற்றும் விசாக்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

பாஸ்சிம் விஹாா் கிழக்கு மற்றும் நிஹால் விஹாா் காவல் நிலையங்களைச் சோ்ந்த குழுக்கள், வெளிநாட்டவா் பிரிவுடன் இணைந்து, 9 தாய், 4 நைஜீரிய, ஒரு உகாண்டா மற்றும் ஒரு கினிய நாட்டவா் உள்பட மேலும் 15 வெளிநாட்டினரைக் கைது செய்தன. அவா்களின் பாஸ்போா்ட் மற்றும் விசா காலாவதியானது கண்டறியப்பட்டது.

வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகம் (எஃப். ஆா். ஆா். ஓ) அவா்கள் மீது நாடு கடத்தல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனா் என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.