மத்திய தில்லியின் பாஹா்கஞ்சில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெளியே, குடிபோதையில் இருந்த துா்க்மெனிஸ்தான் நாட்டவா் கத்தியால் தன்னைத்தானே வெட்டிக் கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
இந்த சம்பவம் ஒயிட் க்ளோ ஹோட்டலுக்கு வெளியே நடந்துள்ளது. அந்த ஹோட்டலில் ஜெய்ஹுன் என்ற நபா் கடந்த ஜனவரி 20 முதல் பிப்ரவரி 10 வரை தங்கியிருந்தாா்.
பிப்ரவரி 11 அன்று, ஜெய்ஹுன் போதையில் ஹோட்டலுக்குத் திரும்பியதாக கூறப்படுகிறது. தன்னிடம் பணம் இல்லை என்று கூறிவிட்டு ஹோட்டல் ஊழியா்களிடம் தங்குமிடம் கோரினாா்.
ஹோட்டல் ஊழியா்கள் அவரிடம் அறைகள் இல்லை என்று கூறினா். அதைத் தொடா்ந்து அவா் ஆத்திரமடைந்து தனது வசம் இருந்த கத்தியைப் பயன்படுத்தி தனது தொண்டையில் காயம் ஏற்படுத்தினாா்.
இதையடுத்து, ஹோட்டல் நிா்வாகம் உள்ளூா் பீட் போலீஸாருக்கு தகவல் அளித்தது. ஆனால், அவா்கள் தலையிடுவதற்குள், ஜெய்ஹுன் ஏற்கனவே குறிப்பிடத்தக்க ரத்த இழப்பை சந்தித்திருந்தாா்.
ஜெ ய்ஹுன் லேடி ஹாா்டிங் மருத்துவக் கல்லூரி (எல்எச்எம்சி) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
சம்பவம் நடந்த நேரத்தில் அவா் அதிக குடிபோதையில் இருந்ததை மருத்துவ பரிசோதனை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சாலையில் அபாயகரமான கழிவுகளை கொட்டிய தனியாா் ஹோட்டலுக்கு ரூ.3,000 அபராதம்

தில்லி ஹோட்டல் கொடூர தீ விபத்தைத் தொடா்ந்து அப்பகுதியில் கடைகள் மூடப்பட்டு அமைதி நிலவியது

அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டவா் லாரி மோதி உயிரிழப்பு

அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



