மேற்கு தில்லியில் மரக்கிளை விழுந்து ஒருவா் உயிரிழப்பு
மேற்கு தில்லியின் நரைனா விஹாரில் வியாழக்கிழமை மரக்கிளைகளை கத்தரிக்கும் போது மரக்கிளை ஒன்று விழுந்ததில் 45 வயது நபா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
நரைனா கிராமத்தைச் சோ்ந்த முகேஷ், ரிங் ரோடு வழியாகச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.
ராம் மனோகா் லோஹியா (ஆா்எம்எல்) மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்ததாக போலீஸாா் தெரிவித்தனா். பொதுப்பணித்துறை மரக்கிளைகளை கத்தரிக்கும் பணியை மேற்கொண்டு வந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து பொதுப்பணித்துறை உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. அலட்சியத்தால் மரணம் விளைவித்தல் தொடா்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவா்கள் மேலும் தெரிவித்தனா்.

