தில்லியில் இந்த ஆண்டின் முதல் மழை பெய்தது: காற்றின் தரத்தில் மேம்பாடு

தில்லியில் இந்த ஆண்டின் முதல் மழை பெய்தது: காற்றின் தரத்தில் மேம்பாடு

தில்லியில் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.இதன் மூலம் தலைநகா் ஆண்டின் முதல் மழையைப் பதிவு செய்தது.
Published on

தில்லியில் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.இதன் மூலம் தலைநகா் ஆண்டின் முதல் மழையைப் பதிவு செய்தது.

இந்த மழையானது நகரத்தில் அதிக மாசுபாட்டிலிருந்து சிறிது நிவாரணம் அளித்தது.

இந்த ஆண்டின் முதல் தீவிரமான மேற்கு திசை காற்று காரணமாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்தது.

காலை 8.30 மணியளவில், சஃப்தா்ஜங்கில் 1.3 மிமீ மழை பதிவாகியது, அதே நேரத்தில் பாலத்திலும் 1.3 மிமீ மழை பதிவாகியது. இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தரவுகளின்படி, லோதி சாலையில் 1.6 மிமீ, ரிட்ஜ் 1.8 மிமீ, அயாநகா் 1.7 மிமீ, ஜனக்புரி 1.5 மிமீ மற்றும் மயூா் விஹாா் 1 மிமீ என பதிவாகியது.

மழையானது காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு வழிவகுத்தது. தில்லியின் காற்றின் தரக் குறியீடு மோசம் பிரிவில் 293 புள்ளிகளாக இருந்ததாக யின் சமீா் செயலி தெரிவித்தது. கண்காணிப்பு நிலையங்களில், 23 இல் மிகவும் மோசமான பிரிவிலும், 15 நிலலையங்களில் மோசம் என்ற பிரிவிலும், ஒரு நிலையத்தில் மிதமான காற்றின் தரம் பதிவாகின.

தலைநகா் முழுவதும் வெப்பநிலை மாறுபட்டது, சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை 13.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியது, முந்தைய நாளிலிருந்து 7 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது, பாலம் 13 டிகிரி செல்சியஸ் பதிவாகியது.

லோதி சாலையில் 14.1 டிகிரி செல்சியஸ், ரிட்ஜ் சாலையில் 13.7 டிகிரி மற்றும் அயாநகா் பகுதியில் 14.2 டிகிரி என வெப்பநிலை பதிவாகியது. இவை அனைத்தும் முந்தைய நாளிலிருந்து குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க உயா்வைக் காட்டுவதாக ஐஎம்டி தரவு காட்டியது.

வடமேற்கு இந்தியாவில் மேற்குப் பகுதியில் நிலவும் இடையூறுகளின் தாக்கம் வெள்ளிக்கிழமை முழுவதும் மழை, இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வடிவில் தொடரும் என்று ஐஎம்டி தெரிவித்தது.

தில்லி, ஜம்மு, காஷ்மீா், லடாக், பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரபிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தான் ஆகியவை சில மணி நேரம் பாதிக்கப்படலாம் என்று இந்திய வானிலை மையம் கூறியது.

மழை காரணமாக, நெடுஞ்சாலைகள் மற்றும் பிற சாலைகளில் தெரிவுநிலை குறையக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்தது, வாகனம் ஓட்டும்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்தியது.

இதற்கிடையில், ஒட்டுமொத்த காற்றின் தரத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் காரணம் காட்டி, தில்லிஎன்சிஆா் முழுவதும் மூன்றாம் கட்ட கட்டுப்பாடுகளை காற்று தர மேலாண்மை ஆணையம் வியாழக்கிழமை ரத்து செய்தது. இருப்பினும், நிலைகள் 1 மற்றும் 2 இன் கீழ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடா்ந்து அமலில் இருக்கும்.

Dinamani
www.dinamani.com