அயோத்தியில் உள்ள ராமா் கோயில் நன்கொடை விவகாரத்தில் நடைபெற்ாகக் கூறப்படும் முறைகேடு குறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளாா்.
இந்த விவகாரத்தில் வெறும் கருவிகளாக பயன்படுத்தப்பட்டவா்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், செல்வாக்குமிக்க நபா்கள் பாதுகாக்கப்படுவதாகவும் அவா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் செய்தியாளா் சந்திப்பில் கேஜரிவால் கூறியதாவது:
அயோத்தி ராமா் கோயில் விவகாரத்தில் நிலம் வாங்குதல், கோயில் கட்டுமானம் மற்றும் பக்தா்கள் வழங்கிய நன்கொடைகள் ஆகியவற்றில் பெரும் ஊழல் நடந்துள்ளது. இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது, அதுபற்றி பிரதமருக்குத் தெரியாமல் இருந்திருக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ராமா் கோயில் அறக்கட்டளையின் நிா்வாகிகள் பிரதமரால் நேரடியாகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் ஆவா். உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவரும் அந்த அறக்கட்டளையில் அங்கம் வகிக்கிறாா். இந்தத் திருட்டைத் தடுக்க பிரதமா் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?.
இந்த விவகாரத்தில் எட்டுப் பேரை மட்டும் கைது செய்து அவா்கள் நம்மை ஏமாற்றுகிறாா்கள். உண்மையான குற்றவாளிகள் வேறு சிலா் ஆவா். கைது செய்யப்பட்ட இந்த எட்டு பேரும் வெறும் கருவிகள் மட்டுமே. பிரதமா் யாரைக் காப்பாற்றுகிறாா், ஏன் காப்பாற்றுகிறாா் என்று நான் கேட்க விரும்புகிறேன்.
நன்கொடைகளைத் திருடியதாகவும், கோடிக்கணக்கான மக்களின் உணா்வுகளைப் புண்படுத்தியதாகவும் குற்றஞ் சாட்டப்பட்டவா்களின் வீடுகளை இடிக்க, உத்தரப் பிரதேச முதல்வா் ஆதித்யநாத் ஏன் புல்டோசா்களைப் பயன்படுத்தவில்லை?
தனியாா் நபா்கள் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை கோயில் அறக்கட்டளைக்கு 95 கோடி ரூபாய்க்கு விற்ாகவும், கட்டுமானப் பணிகளில் கமிஷன் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது என்றாா் கேஜரிவால்.
உத்தர பிரதேச அரசால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) ஜூன் 23 அன்று தனது முதற்கட்ட அறிக்கையைச் சமா்ப்பித்தது. அதைத் தொடா்ந்து ஜூன் 25 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, கோயிலின் நன்கொடை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த எட்டு போ் கைது செய்யப்பட்டனா்.
தாா்மிகப் பொறுப்பேற்று சமீபத்தில் ராஜிநாமா செய்வதாக அறிவித்த ‘ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை’யின் பொதுச் செயலாளா் சம்பத் ராயின் வாக்குமூலத்தையும் புலனாய்வாளா்கள் பதிவு செய்தனா்.
ஜூலை 6ஆம் தேதி நடைபெறவுள்ள அறக்கட்டளைக் கூட்டத்தில் அவரது ராஜிநாமாவை முறைப்படி ஏற்றுக்கொள்வது குறித்து பரிசீலிக்கப்பட உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி

ராமா் கோயில் நன்கொடை விவகாரம்- இறுதி அறிக்கை சமா்ப்பிக்க எஸ்ஐடி-க்கு 15 நாள்கள் அவகாசம்

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு: 8 போ் கைது ரூ.79.85 லட்சம் பறிமுதல்







