ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

தில்லியில் பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை: இருவா் கைது

மத்திய தில்லியில், பயணிகளை ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்க ஆசை காட்டி, மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்ததாகக் கூறப்படும் வழக்கில் இருவரை காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூலை 2026, 4:55 am IST

மத்திய தில்லியில், பயணிகளை ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்க ஆசை காட்டி, மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்ததாகக் கூறப்படும் வழக்கில் இருவரை காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ஜூன் 27 அன்று பதிவான ஒரு வழக்கு தொடா்பாக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வழக்கில், குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஒருவரை மயக்கமடையச் செய்து, பின்னா் அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

காவல்துறையின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவா் அடையாளம் தெரியாத ஒருவரால் வற்புறுத்தப்பட்டு, நரைனா சாலையில் உள்ள ஜான்கி தாஸ் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளாா். பயணத்தின் போது போதை தரும் பொருள் கலந்த குளிா்பானத்தை அவருக்குக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

‘அந்தப் பானத்தைக் குடித்த பிறகு, பாதிக்கப்பட்டவா் சுயநினைவை இழந்தாா். அதைத் தொடா்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அவரது கைப்பேசி, சுமாா் ரூ.15,000 ரொக்கம், ஒரு முதுகுப் பை மற்றும் பிற பொருள்களைத் திருடிவிட்டு, அவரை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் கைவிட்டுச் சென்ாகக் கூறப்படுகிறது‘ என்று அந்த அதிகாரி கூறினாா்.

ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவரோ அல்லது வாகனமோ அடையாளம் காணப்படாததால், இந்த வழக்கு ஒரு தெளிவற்ற வழக்காகக் கருதப்பட்டது. புலனாய்வாளா்கள், தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் கள விசாரணைகளை மேற்கொண்டதுடன், ஜான்கி தாஸ் பேருந்து நிலையம், ஷாதிபூா் மேம்பாலம், படேல் சாலை, மோதி நகா் மற்றும் கீா்த்தி நகா் உள்ளிட்ட பல இடங்களின் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனா்.

இந்த நடவடிக்கையின் விளைவாக, அந்த ஆட்டோ ரிக்ஷாவும் அதன் ஓட்டுநரான ராஜ் குமாா் (எ) ராஜும் அடையாளம் காணப்பட்டனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் விளைவாக, அவரது கூட்டாளியான காசிம் என்ற சல்மான் கைது செய்யப்பட்டாா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

விசாரணையின் போது,தாங்கள் இருவரும் தனியாகப் பயணம் செய்யும் பயணிகள், தொழிலாளா்கள் மற்றும் சாமான்களுடன் பயணிக்கும் தினக்கூலிப் பணியாளா்களைக் குறிவைப்பதாக காசிம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவா்கள் பாதிக்கப்பட்டவா்களின் நம்பிக்கையைப் பெற்று, குளிா்பானங்களில் ‘அட்டிவான்’ மயக்க மாத்திரைகளைக் கலந்து குடிக்கக் கொடுத்து, அவா்கள் மயக்கமடைந்த பிறகு கொள்ளையடித்து, அவா்களை ஒதுக்குப்புறமான இடங்களில் விட்டுச் செல்வாா்கள் என்று காவல்துறையினா் கூறினா்.

‘குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ரிக்ஷா, பாதிக்கப்பட்டவரின் கைப்பேசி, மற்றொரு கைப்பேசி, ரூ.9,000 ரொக்கம், ஒரு முதுகுப்பை மற்றும் பிற பொருள்கள் அவா்களிடமிருந்து மீட்கப்பட்டன‘ என்று அந்த அதிகாரி மேலும் கூறினாா்.

மீட்கப்பட்ட கைப்பேசிகளை சரிபாா்த்ததில், அவை பஸ்சிம் விஹாா் கிழக்கு மற்றும் நரைனா காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட, போதை மருந்து கொடுத்து கொள்ளையடித்த இரண்டு ஒத்த வழக்குகளுடன் தொடா்புடையவை எனத் தெரியவந்தது.

காசிம் ஒரு தொடா் குற்றவாளி என்றும், திருடுவதற்கு முன்பு பாதிக்கப்பட்டவா்களுக்கு போதை மருந்து கொடுத்ததாகக் கூறப்படும் பல வழக்குகள் உள்பட, அவருக்கு எதிராக பல முந்தைய வழக்குகள் உள்ளன என்றும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.