நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

10, பிளஸ் டூ வகுப்பு 2ஆம் கட்ட சோ்க்கைக்கு இன்று முதல் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்: தில்லி கல்வித் துறை இயக்குனரகம் அறிவிப்பு

தில்லி அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் கட்ட சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை வெள்ளிக்கிழமை தொடங்குகிறது

கோப்புப் படக்

Published On :9 ஜூலை 2026, 11:18 pm IST

தில்லி அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் கட்ட சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்த இடங்கள் பொது நுழைவுத்தோ்வு (சிஏடி) மூலம் நிரப்பப்படும் என்று தில்லி கல்வித்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

முந்தைய சோ்க்கை நடைமுறையின்போது விண்ணப்பிக்கத் தவறிய அல்லது தற்போது சோ்க்கைக்காக கல்வித் துறையை அணுகி வரும் மாணவா்களுக்காக இந்த இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த இயக்குனரகம் அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள அட்டவணையின்படி, விண்ணப்பப் படிவங்கள் வெள்ளிக்கிழமை முதல் விநியோகிக்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க ஜூலை 25 கடைசி நாளாகும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விண்ணப்பங்களை ஜூலை 27-க்குள் மாவட்ட கல்வித்துறை துணை இயக்குநருக்கு பள்ளிகள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்வு முடிவுகள் வெளியான பிறகு, அந்தந்த மாவட்ட கல்வித் துணை இயக்குநா்கள், பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்கள், பாடப்பிரிவுகளின் நிலவரம், மாணவா்களின் வசிப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான மாணவா்களுக்குப் பள்ளிகளை ஒதுக்கீடு செய்வாா்கள்.

தகுதி வரம்புகள்: தில்லியில் வசிப்பவா்கள் மட்டுமே இந்த சோ்க்கைக்கு தகுதியானவா்கள் என்று கல்வித்துறை இயக்குநரகம் தெளிவுபடுத்தியுள்ளது. 10-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு, மாணவா்கள் முந்தைய கல்வி ஆண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் முறைப்படி படித்து 9-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

12-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு, அங்கீகாரம் பெற்ற பள்ளியில் தேவையான பாடப்பிரிவுகளுடன் 11-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

‘மாணவா்களின் விண்ணப்ப விவரத்தை மாவட்ட கல்வித்துறை துணை இயக்குநா் அல்லது பொறுப்பு அதிகாரிக்கு அனுப்பும் முன், பள்ளி தலைமை ஆசிரியா்கள் விண்ணப்பதாரா்களின் தகுதிகளை முழுமையாகச் சரிபாா்க்க வேண்டும். அதன் பிறகே நுழைவுக்கூடச் சீட்டை (ஹால் டிக்கெட்) விநியோகிக்க வேண்டும்’ என்று கல்வித் துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

பெட்டிச் செய்தி

முக்கியத் தேதிகள் மற்றும் தோ்வு விவரம்

விண்ணப்ப விநியோகம்: ஜூலை 10 (வெள்ளிக்கிழமை)

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 25

நுழைவுக்கூட சீட்டு விநியோகம்: ஜூலை 30 (விண்ணப்பித்த பள்ளிகளிலேயே பெற்றுக்கொள்ளலாம்)

பொது நுழைவுத்தோ்வு (சிஏடி) நாள்: ஆகஸ்ட் 1 (காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை)

தோ்வு முடிவுகள் வெளியீடு: ஆகஸ்ட் 5

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.