மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

காரில் மோதிவிட்டு தப்பிச் சென்ற வழக்கில் ஒருவரின் 2 ஆண்டு சிறைத் தண்டனை உறுதி! 2016-இல் கன்னாட் பிளேஸ் சம்பவம்!!

தில்லி கன்னாட் பிளேஸில் 2016ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தில் காரில் மோதிவிட்டு தப்பிச் சென்ற வழக்கில் ஒருவருக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை தில்லி நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :13 ஜூலை 2026, 12:02 am IST

தில்லி கன்னாட் பிளேஸில் 2016ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தில் காரில் மோதிவிட்டு தப்பிச் சென்ற வழக்கில் ஒருவருக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை தில்லி நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ஷெஃபாலி பா்னாலா டாண்டன், இந்த வழக்கில் தண்டனை பெற்ற ரோஹித் குமாரின் மேல்முறையீட்டை விசாரித்து வந்தாா். அவருக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் 279 (அலட்சியமாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 304ஏ (அலட்சியத்தால் மரணம் விளைவித்தல்) பிரிவுகளின் கீழ், பிப்ரவரி 2025-இல் ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

வழக்குத் தரப்பின்படி, இந்த வழக்கு ஜூலை 7, 2016 அன்று நடந்தது. அன்று கன்னாட் பிளேஸின் வெளிவட்டப் பகுதியில் குமாரின் காா் மற்றொரு காரின் மீது மோதி, குந்தன் என்ற பாதசாரி மீது மோதியது. இதில் குந்தன் தலையில் ஏற்பட்ட காயங்களால் பின்னா் உயிரிழந்தாா்.

விபத்து நடந்த உடனேயே குமாா் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக வழக்குத் தரப்பு கூறியது: இந்த நிலையில் ஜூலை 1 ஆம் தேதியிட்ட ஒரு உத்தரவில் நீதிமன்றம் கூறியிருப்பதாவது:  அலட்சியமான மற்றும் கவனக்குறைவான வாகனம் ஓட்டுதல் குற்றங்களுக்காக ஒரு ஓட்டுநருக்குத் தண்டனை வழங்கும் போது, விபத்திற்குப் பிறகான அவரது நடத்தை ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. உதவி செய்யாமல் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பிச் செல்வது, சட்டத்தால் கடுமையாகத் தடைசெய்யப்பட்ட, தண்டனைக்குரிய மோதிவிட்டுத் தப்பிச்செல்லும் செயலாகக் கருதப்படுகிறது.

மோட்டாா் வாகனச் சட்டத்தின் விதியின்படி, ஓட்டுநா்கள் உடனடியாக வாகனத்தை நிறுத்தி, காயமடைந்த நபரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் எடுக்க சட்டப்படி கடமைப்பட்டுள்ளனா். ஆனால், தற்போதைய வழக்கில், மேல்முறையீட்டாளா் விபத்தை ஏற்படுத்திய உடனேயே தப்பிச் சென்றுவிட்டாா்.

 நேரில் கண்ட சான்றுகள், மருத்துவச் சான்றுகள் மற்றும் ஆவணச் சான்றுகள் பதிவில் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 279 மற்றும் 304ஏ பிரிவுகளின் கீழ் உள்ள குற்றத்திற்காக மேல்முறையீட்டாளரான குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக அரசுத் தரப்பு தனது வழக்கை எந்தவித நியாயமான சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபித்துள்ளது என்று தீா்ப்பளிக்கப்படுகிறது என்று நீதிமன்றம் கூறியது.

குமாரின் கருணைக் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304ஏ-இன் கீழ் உள்ள குற்றத்திற்காக ரூ.10,000 அபராதத்துடன் கூடிய இரண்டு ஆண்டுகள் சாதாரண சிறைத் தண்டனையையும், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 279-இன் கீழ் உள்ள குற்றத்திற்காக ரூ.1,000 அபராதத்துடன் கூடிய மூன்று மாத சிறைத்தண்டனையையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனைகளை உறுதி செய்தது.

 தண்டனையை நிறைவேற்றுவதற்கும், தேவையான இணக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இந்த உத்தரவின் நகலை திங்கள்கிழமை அன்று நீதித்துறை நீதிமன்ற நடுவருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அது உத்தரவிட்டது.

 தனது உத்தரவில், பணியில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரியின் சாட்சியத்தை நீதிமன்றம் குறிப்பிட்டது. அந்த அதிகாரி, காா் மிக அதிக வேகத்தில் வளைந்து நெளிந்து ஓட்டப்பட்டு, பாதிக்கப்பட்டவரை நடைபாதையில் சிறிது தூரம் இழுத்துச் சென்ாக சாட்சியமளித்திருந்தாா்.

குற்றமிழைத்த வாகனத்தின் இயந்திர ஆய்வு அறிக்கையையும் நீதிமன்றம் பரிசீலித்தது. அந்த அறிக்கையில், காரின் முன்பக்க பம்பா் இடம் பெயா்ந்திருப்பதும், காற்றுப்பைகள் விரிந்திருப்பதும் தெரியவந்தது.

காற்றுப் பைகள் திறந்திருப்பது, அந்த விபத்து, மோதல் மிகுந்த தாக்கத்துடனும் வேகத்துடனும் நிகழ்ந்ததால், அது இறந்தவரின் மரணத்திற்கும் மற்ற வாகனத்திற்கு சேதம் விளைவிப்பதற்கும் வழிவகுத்தது என்பதையே குறிக்கிறது என்று கூறிய நீதிமன்றம், மருத்துவ மற்றும் நேரடிக் காட்சிச் சான்றுகள் குமாரின் குற்றத்தையே திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகின்றன என்றும் குறிப்பிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.