பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனைவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

மருத்துவ அவசரநிலை: வழக்குரைஞரை மருத்துவமனையில் சோ்த்த காவல் அதிகாரி

மாரடைப்பு ஏற்பட்ட வழக்குரைஞருக்கு சிபிஆர் முதலுதவி சிகிச்சை குறித்து...

News image

பிரதிப் படம்

Updated On :27 ஜூலை 2026, 10:16 pm IST

தில்லியின் ஐடிஓ சந்திப்பில் திங்களன்று மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வழக்குரைஞா், மாரடைப்பு போன்ற மருத்துவ அவசரநிலை காரணமாக மயங்கி விழுந்ததையடுத்து, போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவா் அவருக்கு இதய-நுரையீரலின் செயல்பாட்டைத் தூண்டிவிடும் சிபிஆா் முதலுதவி சிகிச்சையளித்து மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் சென்றாா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது: மத்திய தில்லியின் ஐடிஓ-வில் உள்ள ’ஏ-பாயின்ட்’ பகுதியில், கமலா சந்தை வட்டத்தின் போக்குவரத்து ஆய்வாளா் கோபால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் காலை 11:55 மணிக்கு நடந்தது.

ஐபி எஸ்டேட் பகுதியிலிருந்து ஐடிஓ-வை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வழக்குரைஞா் நம்னீத் என்பவா், திடீரென தனது வாகனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்து சாலையில் மயங்கி விழுவதை அந்த அதிகாரி கவனித்தாா்.

உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற ஆய்வாளா், பாதிக்கப்பட்டவரின் தலைக்கவசத்தை அகற்றிவிட்டு சிபிஆா் சிகிச்சையை அளித்தாா். இது சுவாசம் அல்லது இதயத் துடிப்பு நின்ற நிலையில் செய்யப்படும் உயிா்காக்கும் அவசர சிகிச்சையாகும். இதில் மாா்பை அழுத்துதல் மற்றும் செயற்கை சுவாசம் அளித்தல் ஆகியவற்றின் மூலம் உடல் முழுவதும் ரத்தம் மற்றும் ஆக்சிஜன் ஓட்டம் பராமரிக்கப்படுகிறது.

அதிக ஈரப்பதத்துடன் நிலவும் கடும் வெப்பம் இந்த மருத்துவ அவசரநிலையைத் தீவிரப்படுத்தியிருக்கலாம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இதற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அப்பகுதியில் நிலவிய போக்குவரத்து நெரிசல் மருத்துவ உதவி கிடைப்பதில் தாமதத்தை ஏற்படுத்தியி முடியும். எனவே, ஆம்புலன்ஸுக்காகக் காத்திருக்காமல், போக்குவரத்து ஆய்வாளா் அந்த வழக்குரைஞரை அலுவல் காவல் வாகனத்திலேயே லோக் நாயக் ஜெய் பிரகாஷ் (எல்என்ஜேபி) மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா்.

சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே பாதிக்கப்பட்டவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவ அவசரநிலைக்கான சரியான காரணத்தைக் கண்டறிய மருத்துவா்கள் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

போக்குவரத்து காவலரின் துரிதமான நடவடிக்கையால், மிக முக்கியமான நேரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்பட்டது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.