சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

உஸ்மான்பூரில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 26 வயது இளைஞா் ஒருவா் கத்தியால் குத்திக் கொலை

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:08 am IST

வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 26 வயது இளைஞா் ஒருவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா். இறந்தவா் அருகிலுள்ள பிரம்மபுரியைச் சோ்ந்த லலித் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

காவல்துறையின் கூற்றுப்படி, அதிகாலையில் நியூ உஸ்மான்பூா் காவல் நிலையத்தில் கத்திக்குத்து சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பகத் சிங் காலனியில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை குழுவினா், அங்கு ஒருவா் தரையில் கிடப்பதைக் கண்டனா். அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டாா்.

பாதிக்கப்பட்டவருக்கு கத்திக்குத்து காயங்கள் இருந்ததையும், அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதையும் காவல்துறை கண்டறிந்தது. குற்றச் சம்பவ இடத்தை ஆய்வு செய்யவும், ஆதாரங்களை சேகரிக்கவும் தடயவியல் குழு வரவழைக்கப்பட்டது.

இது தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவு 103(1)-இன் கீழ் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.