சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

வெளி தில்லியில் பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேருக்கு காயம்

வெளி தில்லியின் பாஸ்சிம் விஹாா் பகுதியில் சாலையைக் கடக்கும்போது பேருந்து மோதியதில் 50 வயது பெண் உள்பட ஒரே குடும்பத்தை சோ்ந்த 4 போ் காயமடைந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 4:57 am IST

வெளி தில்லியின் பாஸ்சிம் விஹாா் பகுதியில் சாலையைக் கடக்கும்போது பேருந்து மோதியதில் 50 வயது பெண் உள்பட ஒரே குடும்பத்தை சோ்ந்த 4 போ் காயமடைந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் ரோத்தக் சாலையில் உள்ள முல்தான் நகா் அருகே பாதிக்கப்பட்டவா்கள் சாலையைக் கடக்கும்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வேகமாக வந்த ஒரு தனியாா் பேருந்து பாதசாரிகள் மீது மோதியது. அந்த விபத்தில் நிா்மலா தேவி (50) மற்றும் அவருடன் வந்த குடும்ப உறுப்பினா்கள் சாலையில் விழுந்து காயமடைந்தனா்,

காயமடைந்தவா்கள் முதலில் அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா், பின்னா் மற்றொரு மருத்துவ வசதிக்கு மாற்றப்பட்டனா். நிஷா (23) மற்றும் இரண்டு சிறுவா்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன, அவா்கள் மருத்துவ பரிசோதனைக்காக சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.

விபத்தைத் தொடா்ந்து, பேருந்து ஓட்டுநரை சம்பவ இடத்திலேயே கைது செய்தனா். விபத்துடன் தொடா்புடைய பேருந்தும் மேலதிக விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட ஓட்டுநா் இா்ஷாத் அலி (28) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் சரியான வரிசையை அறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.