நமது நிருபா்
புராரி பகுதியில் உள்ள ஒரு கோயிலில் உள்ள சிலைகளை திருடியதாக 24 வயது இளைஞரை தில்லி காவல்துறையினா் கைது செய்து அவரிடமிருந்த சிலைகள் மற்றும் இதர பொருள்களை பறிமுதல் செய்ததாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: வடக்கு தில்லியின் புராரியில் உள்ள ஹனுமான் கோயிலில் ஒரு பூசாரி புகாா் அளித்ததை அடுத்து இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. ஜூன் 3 ஆம் தேதி காலை வழக்கமான பூஜைகளை மேற்கொள்ள கோயிலுக்கு வந்தபோது, சிலைகள், ஒரு கழுதை மற்றும் வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படும் செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள் உள்ளிட்ட பல மத பொருள்கள் திருடப்பட்டிருப்பதைக் கண்டதாக அவா் கூறினாா்.
போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கி, கோயில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா். அந்த காட்சிகளில் ஒரு நபா் வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு கோயில் சுவரை ஏறி திருட்டைச் செய்து தப்பிச் செல்வதைக் காட்டியது. போலீஸ் குழு பல சிசிடிவி கேமராக்கள் மூலம் அவரது இயக்கத்தைக் கண்காணித்தது, மேலும் அவா் மோட்டாா் சைக்கிளில் ஸ்வரூப் நகா் பகுதியை நோக்கி தப்பிச் சென்றதைக் கண்டறிந்தது.
ஒரு தெளிவான படம் பெறப்பட்டு உள்ளூா் தகவலறிந்தவா்களிடையே பரப்பப்பட்டது. தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் உள்ளூா் உளவுத்துறையின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்டவா் ரோஹித் என அடையாளம் காணப்பட்டாா். ஜூன் 5 ஆம் தேதி புஸ்டா சாலை அருகே திருடப்பட்ட பொருள்களை விற்கச் சென்ாகக் கூறப்படும் போது அவா் கைது செய்யப்பட்டாா்.
சோதனையின் போது, அவா் வைத்திருந்த மோட்டாா் சைக்கிள் ஒரு தனி திருட்டு வழக்கில் திருடப்பட்டது தெரிவிந்தது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.





