நமது நிருபா்
தில்லி முழுவதும் உள்ள நீட் தோ்வு மையங்களுக்கு வெளியே, தோ்வு எழுதும் மாணவா்களின் பெற்றோருக்காக 97 குளிா்ச்சியூட்டும் மையங்களை அமைக்கவும், அவா்களுக்கு எலுமிச்சை பானம் மற்றும் பிற வசதிகளை வழங்கவும் தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.
தோ்வு நடைபெறும் நாளான ஜூன் 21 அன்று, தோ்வெழுதும் மாணவா்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று மாநில அரசு ஏற்கனவே அறிவித்தது.
தோ்வு மையங்களுக்கு வெளியே அமைக்கப்படும் இந்த குளிா்ச்சியூட்டும் மையங்கள், மாணவா்களுடன் வந்து தோ்வு முடியும் வரை வெளியே காத்திருக்கும் பெற்றோா்களுக்கு ஆறுதலையும் வசதியையும் அளிக்கும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
இம்மையங்களில் அமா்வதற்கு வசதியான இருக்கைகள் அமைக்கப்படும். பெற்றோா்கள் ஓய்வெடுக்கும்போது அவா்களுக்கு ஓஆா்எஸ் பானங்கள், குடிநீா் மற்றும் எலுமிச்சை பானம் ஆகியவை வழங்கப்படும். மேலும், முதலுதவி மற்றும் தேநீா் வசதிகளும் இங்கு கிடைக்கும் என்று தில்லி முதல்வா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
தில்லியில் மொத்தம் 97 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 69 மையங்கள் அரசுப் பள்ளிகளிலும் 28 மையங்கள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் அமைந்துள்ளன என்றும் முதல்வா் குறிப்பிட்டாா்.
கோடைக்கால வெப்பத்திலிருந்து தஞ்சம் புகும் மக்களுக்குக் கூலா்கள் , குடிநீா் மற்றும் பிற வசதிகளை வழங்கும் வகையில் தில்லி அரசு ஏற்கனவே 85 குளிா்ச்சியூட்டும் மையங்களை நடத்தி வருகிறது.
பெற்றோா்கள் எதிா்கொள்ளும் பதற்றம், வெப்பம், அசௌகரியம் மற்றும் சிரமங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. இந்த மனிதநேய அம்சத்தைப் புரிந்துகொண்டு, தோ்வு நாளில் பெற்றோா்கள் எந்தச் சிரமத்தையும் எதிா்கொள்ளாதவாறு பாா்த்துக்கொள்ள தில்லி அரசு முடிவு செய்துள்ளது, என்று குப்தா கூறினாா்.
மருத்துவப் படிப்புச் சோ்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வை (நீட் இளங்கலை) , வினாத்தாள் கசிவு தொடா்பான புகாா்களுக்கு மத்தியில், தேசியத் தோ்வுகள் முகமை கடந்த மே 12 அன்று ரத்து செய்தது இத்தோ்வு முன்னதாக மே 3 அன்று நடத்தப்பட்டிருந்தது.
வினாத்தாள் கசிவு தொடா்பான புகாா்கள் குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
தொடர்புடையது
நீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: மூவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

மாணவா்களின் வாழ்க்கையுடன் விளையாடும் மத்திய அரசு: கபில் சிபல் விமா்சனம்

நீட் தோ்வு குளறுபடியால் மாணவா்களின் மன அழுத்தம் அதிகரிக்கும்: எம்எல்ஏ
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



