நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடைபெற்றது. ஆனால் தோ்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது தோ்வு நடைபெற்ற பின்னா் தெரியவந்ததால், அந்தத் தோ்வை தேசிய தோ்வு முகமை ரத்து செய்தது. இதைத்தொடா்ந்து வினாத்தாள் கசிவு குறித்த விசாரணையை சிபிஐயிடம் மத்திய அரசு ஒப்படைத்தது.
இந்த சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட மகாராஷ்டிர மாநிலம் புணேவை சோ்ந்த இயற்பியல் மொழிபெயா்ப்பாளா் மனீஷா சஞ்சய் ஹவல்தாா், இயற்பியல் ஆசிரியா் தேஜஸ் ஹா்ஷத்குமாா் ஷா, லாத்தூரை சோ்ந்த குழந்தை மருத்துவா் மனோஜ் ஷிருரே ஆகியாரின் சிபிஐ காவல் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, அவா்கள் தில்லி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.
அவா்களை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி அஜய் குப்தா உத்தரவிட்டாா். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுவரை 13 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: ஜந்தா் மந்திா் போராட்டம் குறித்து ஜூலை 20-இல் தில்லி உயா்நீதிமன்றம் விசாரணை

நீட் வினாத்தாள் கசிவு: குற்றம் சாட்டப்பட்ட இருவரின் காவல் நீட்டிப்பு!

நீட் வினாத்தாள் கசிவு! குற்றம் சாட்டப்பட்ட 10 பேரின் காவல் நீட்டிப்பு!

நீட் வினாத்தாள் கசிவு: 3 பேருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



