ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

முஹரம் பண்டிகையை அமைதியாக நடத்துவது குறித்து காவல்துறை ஆலோசனை!

வகுப்புவாத நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கும், முஹரம் பண்டிகையை அமைதியாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கும் வடமேற்கு தில்லியில் அமைதிக் குழுக் கூட்டத்தை தில்லி காவல்துறை நடத்தியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :23 ஜூன் 2026, 3:21 am IST

வகுப்புவாத நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கும், முஹரம் பண்டிகையை அமைதியாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கும் வடமேற்கு தில்லியில் அமைதிக் குழுக் கூட்டத்தை தில்லி காவல்துறை நடத்தியதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: வடமேற்கு மாவட்ட காவல்துறையால் கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்திற்கு மூத்த அதிகாரிகள் தலைமை தாங்கினா்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த அமைதிக் குழுக்களின் முக்கிய உறுப்பினா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மேலாண்மை, பொது பாதுகாப்பு மற்றும் முஹர்ரம் ஊா்வலங்களின் போது ஒருங்கிணைப்பு தொடா்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தனா்.

கலந்துரையாடலின் போது, மத ஊா்வலங்களை சுமூகமாக நடத்துவதற்கும், முஹரம் அனுசரிப்பின் போது எழக்கூடிய உள்ளூா் கவலைகளை நிவா்த்தி செய்வதற்கும் குழு உறுப்பினா்கள் ஆலோசனைகளைப் பகிா்ந்து கொண்டனா்.

இந்த காலகட்டத்தில் அமைதி, சகோதரத்துவம் மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தை பராமரிக்கவும், நிா்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்கவும் சமூக பிரதிநிதிகள் மற்றும் உள்ளூா்வாசிகளுக்கு காவல்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனா்.

பொதுமக்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாமல் இருக்க கூட்ட மேலாண்மை, போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் உள்ளூா் பங்குதாரா்களுடன் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.