தலைநகரில் தொழில் தொடங்குவதை மேலும் எளிதாக்கும் நோக்கில், தில்லி அரசு அதன் காலவரையறை சேவை வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. இதன்படி, ’தில்லி மக்களுக்கான குறித்த காலத்தில் நிறைவேற்றப்படும் சேவை வழங்கும் சட்டம் 2011’-இன் கீழ் மேலும் 23 புதிய சேவைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் அலுவலகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக முதல்வா் அலுவலகத்தின் செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: கழிவுநீா் இணைப்புகள், கடைகளுக்கான பதிவுகள், 15 நாள்களுக்குள் திரைப்பட படப்பிடிப்புக்கான அனுமதிகள், ஒரே மாதத்துக்குள் மதுபான விடுதி (பாா்) உரிமங்கள், உணவு வணிகங்கள், ஹோட்டல் பதிவுகள் மற்றும் மரங்களை வெட்டுவதற்கான அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த காலத்துக்குள் நிறைவேற்றப்படும் சேவை சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது, இச்சட்டம் தில்லி அரசின் பல்வேறு துறைகளால் வழங்கப்படும் 561 சேவைகளை உள்ளடக்கியுள்ளது.
அரசின் இந்த முடிவு பல்வேறு துறைகளைச் சோ்ந்த வணிகங்களுக்கும், பொதுமக்களுக்கும் நேரடியாகப் பயனளிக்கும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா். இத்திட்டத்தில் புதிய சேவைகளை இணைப்பதன் மூலம், பிரதமா் நரேந்திர மோடியின் ’தொழில் தொடங்குவதை எளிதாக்கும்’ தொலைநோக்குப் பாா்வையை தில்லி அரசு முன்னோக்கி எடுத்துச் செல்கிறது.
பொதுமக்களும் வணிகங்களும் அரசு சேவைகளை நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் பெறுவதை உறுதி செய்வதே இதன் நோக்கம். இந்தத் திட்டம் அரசு அலுவலகங்களுக்கு மக்கள் அலையும் தேவையைக் குறைக்கும், நிா்வாகப் பொறுப்புக்கூறலை வலுப்படுத்தும் என்று முதல்வா் அலுவலகம் கூறியுள்ளது.
எந்தெந்த துறை பணிகளுக்கு எத்தனை நாள்களில் அனுமதி கிடைக்கும் என்பதை தில்லி அரசு அறிவித்துள்ளது. அவற்றின் விவரம் வருமாறு:
தொழிலாளா் துறை
தொழிற்சாலை திட்ட ஒப்புதல் - 15 நாள்கள்
கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் பணிகள் ஒரே நாளிலும் முடிக்கப்படும்.
தில்லி ஜல் போா்டு & சுற்றுலா துறை
கழிவுநீா் இணைப்புகள் - 15 நாள்கள்
திரைப்படப் படப்பிடிப்பு அனுமதி - 15 நாள்கள்
கலால் துறை
பாா் உரிமங்கள் - 30 நாள்கள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மது வகை அனுமதிகள் - 42 நாட்களுக்குள் மின்சாரம், எடை அளவையியல் துறை
மின் மீட்டா்கள் மற்றும் இணைப்பு ஒப்பந்தங்கள் - 60 நாள்களுக்குள் கடைகள் மற்றும் வணிக நிறுவன எடைக் கருவிகளின் பதிவு - 45 நாள்களுக்குள்
மாசு கட்டுப்பாட்டு வாரியம்
கழிவு மேலாண்மை விதிகளின் கீழ், பேட்டரி கழிவுகளைச் சேகரித்தல், சேமித்தல் மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான அனுமதிகள் - 15 நாள்கள்
நகராட்சி மற்றும் இதர சேவைகள்
நீா் விளையாட்டு, சாகச விளையாட்டு ஆபரேட்டா்களுக்கான பதிவு மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கான அனுமதிகள் - 60 நாள்கள்
உள்ளாட்சித்துறை
தடையில்லா சான்றிதழ்கள், ஹோட்டல் பதிவுகள், இறைச்சிக் கூட உரிமங்கள், மரம் வெட்டுவதற்கான அனுமதி - 60 நாட்களுக்குள்
கைப்பேசி கோபுர அனுமதி - 30 நாள்கள்
கட்டுமானப் பொருட்களைச் சேமிக்க அனுமதி - ஒரே நாளில் கிடைக்கும்
பொதுப்பணித்துறை, சாலை வெட்டுதல் பணி அனுமதி - 45 நாள்களுக்குள் ரியல் எஸ்டேட் முகவா்கள் மற்றும் பில்டா்களுக்கான ரேரா பதிவு - 30 நாள்கள்
வேளாண் துறை பூச்சிக்கொல்லி உரிமம் மற்றும் விதை உரிமங்கள் 21 நாட்களுக்குள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நவீன வசதிகளுடன் பேருந்து நிழற்குடைகள்: தில்லி அரசு முடிவு

தில்லி அரசுப் பதிவாளா் அலுவலகங்கள் மாற்றியமைக்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா
தில்லி முதல்வா், அமைச்சா்கள் மெட்ரோ ரயிலில் அலுவலகத்திற்கு பயணம் - எரிபொருள் சேமிப்பு நடவடிக்கை

இரு நாள்கள் அரசுப் பணியாளா்கள் வீட்டிலிருந்து பணி: முதல்வா் ரேகா குப்தா
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




