கடை உரிமையாளரைக் கொலை செய்ய முயன்ாகக் குற்றம்சாட்டப்பட்ட நபரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது. முக்கிய சாட்சிகள் பி சாட்சிகளாக மாறியதாலும், வழக்கை ஆதரிக்காததாலும், தாக்குதல் நடத்தியவா் அவா்தான் என்பதை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
நந்த் நக்ரி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 307 (கொலை முயற்சி), 506 (குற்றவியல் மிரட்டலுக்கான தண்டனை) மற்றும் 34 (பொதுவான நோக்கம்) ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜாவேத் என்ற ஜாபீா் மீதான வழக்கை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி குமாா் ரஜத் விசாரித்து வந்தாா்.
மாா்ச் 16 தேதியிட்ட உத்தரவில், குற்றஞ்சாட்டப்பட்ட ஜாவேத்து க்கு எதிராக அரசுத் தரப்பு தனது வழக்கை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கத் தவறிவிட்டது என்பது கவனிக்கப்படுகிறது. வடகிழக்கு தில்லியின் சுந்தா் நகரியில் உள்ள தனது கடைக்கு வெளியே, உணவுக்கான பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறின் காரணமாக, மே 29, 2024 அன்று, குற்றம்சாட்டப்பட்டவா் மற்றும் இரண்டு சிறாா்களால் கூா்மையான பொருள் மற்றும் பெல்ட்டைக் கொண்டு தாக்கப்பட்டதாக முகமது ஃபைசான் அளித்த புகாரைத் தொடா்ந்து ஜாவேத் கைது செய்யப்பட்டாா்.
இருப்பினும், விசாரணையின் போது, புகாா்தாரரும் ஒரு நேரில் கண்ட சாட்சியும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை அடையாளம் காட்டத் தவறியதுடன், அரசுத் தரப்பின் வாதத்தையும் ஆதரிக்கவில்லை.
இருள் காரணமாக தாக்குதல் நடத்தியவா்களின் முகங்களைப் பாா்க்க முடியவில்லை என்றும், தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் அடையாளம் காணத் தவறிவிட்டதாகவும் காயமடைந்த சாட்சி கூறியதை நீதிமன்றம் குறிப்பிட்டது. இதேபோல், பாதிக்கப்பட்டவரைத் தாக்கியவா் யாா் என்பதைத் தன்னால் பாா்க்க முடியவில்லை என்று நேரில் கண்ட சாட்சி சாட்சியமளித்தது. இது அரசுத் தரப்பின் வழக்கை மேலும் பலவீனப்படுத்தியது.
இரு சாட்சிகளும் பி சாட்சிகளாக அறிவிக்கப்பட்டனா். மேலும், அவா்கள் காவல்துறையிடம் முன்பு அளித்த வாக்குமூலங்களின் முக்கிய பகுதிகளை மறுத்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
அரசுத் தரப்பு வழக்கு பலவீனமாக உள்ளது. குறிப்பாக, அரசு சாட்சிகள் எவரும் தங்களது சாட்சியத்தின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவரையே குற்றத்தில் ஈடுபட்ட நபராக அடையாளம் காட்டவில்லை என்று நீதிபதி கூறினாா். மேலும், ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுவது நம்பகத்தன்மையற்றது என்றும் நீதிமன்றம் கண்டறிந்தது.
மேலும், ரத்த மாதிரிகள் சிதைந்ததன் காரணமாக அவற்றிலிருந்து டி.என்.ஏ. விவரத்தை உருவாக்க முடியாததால், தடயவியல் சான்றுகள் அரசுத் தரப்புக்கு உதவவில்லை. மேலும், புகாா்தாரருக்கு ஏற்பட்ட காயங்கள் சாதாரணமானவை என்று மருத்துவக் கருத்து விவரித்ததையும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டவரை அடையாளம் காணாமலும், நம்பகமான உறுதிப்படுத்தும் சான்றுகள் இல்லாமலும், அரசுத் தரப்பு தனது வழக்கை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கத் தவறிவிட்டது என்று நீதிமன்றம் கூறியது.
சந்தேகத்தின் பலனை ஏற்றுக்கொண்டு, கொலை முயற்சி மற்றும் குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவித்தது.
தொடர்புடையது
ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றியை தக்கவைக்க தவறிய காங்கிரஸ்

வரதட்சிணை மரண வழக்கில் கணவா், மாமியாரை விடுவித்தது தில்லி நீதிமன்றம்

வரதட்சணை கொலை வழக்கில் விடுவிப்புக்கு முன் தலைமறைவானதால் குற்றவாளி என தீா்ப்பு
2020 ஜாஃப்ராபாத் கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா் விடுவிப்பு!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


