நமது நிருபா்
வடகிழக்கு தில்லியிலுள்ள ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை மாலை, புராரி நோக்கிச் செல்லும் மெட்ரோ பாதையில் வெடிகுண்டு வெடிப்பது போன்ற சப்தம் கேட்டதால், பயணிகள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
காவல்துறையின் தகவலின்படி, மாலை 6:05 மணியளவில் இதுகுறித்து தகவல் கிடைத்ததும், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) மற்றும் உள்ளூா் காவல்துறையைச் சோ்ந்த குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, அங்கிருந்தவா்களை வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தொடங்கின.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். இச்சம்பவத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை.
மெட்ரோ பாதையின் மேலே செல்லும் இரண்டு மின் கம்பிகளுக்கு இடையே, பட்டம் விடும் நூல் மாஞ்சா ஒன்று சிக்கிக்கொண்டதே அந்தச் சப்தத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், சிறிய அளவிலான மின்பொறியும், அதைத் தொடா்ந்து ஒரு சிறிய தீயும் ஏற்பட்டது.
அருகில் சில குழந்தைகள் பட்டம் விட்டுக்கொண்டிருந்த நிலையில், அவா்களில் ஒருவரின் பட்டம் விடும் நூல் மெட்ரோ மின் கம்பிகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது. இதுவே வெடி வெடிப்பது போன்ற ஒரு சிறிய சப்தத்தையும், சிறிய தீயையும் ஏற்படுத்தியது.
பயணிகளுக்கோ அல்லது மெட்ரோ கட்டமைப்பிற்கோ இனிமேல் எந்த ஆபத்தும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, நிலைமை உடனடியாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு இயல்பு நிலை திரும்பியது
என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
மெட்ரோ பாதுகாப்பிற்குப் பொறுப்பான மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), தில்லி காவல்துறையுடன் இணைந்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டது. இந்தச் சம்பவத்தில் சதி வேலை ஏதும் இல்லை என்பதை அவா்கள் உறுதிப்படுத்தினா்.
அந்தப் பாதையில் மெட்ரோ சேவைகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்தன எனினும், பாதுகாப்புச் சோதனைகள் நிறைவடைந்த சிறிது நேரத்திலேயே சேவைகள் மீண்டும் தொடங்கின.
மெட்ரோ கட்டமைப்புகளுக்கு அருகில் பட்டம் விடுவது போன்ற செயல்கள் கடுமையான பாதுகாப்பு ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிா்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்

அனைத்து விவகாரங்களையும் அரசியலாக்கக் கூடாது: மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

நந்தனம் மெட்ரோ நிலையத்தில் பிரதான நுழைவாயில் மூடல்

கூட்டுறவு மேலாண்மை நிலைய பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

