பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி! திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்! மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ் “சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
/

தெருச் சண்டையைத் தடுக்க முயன்ற உணவு விநியோக ஊழியா் கொலை

தென்மேற்கு தில்லியின் துவாரகா பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின்போது தலையிட முயன்ற 32 வயதான உணவு விநியோக ஊழியா் ஒருவா் கத்தியால் குத்திக் கொலை

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :30 மார்ச் 2026, 11:47 pm

தென்மேற்கு தில்லியின் துவாரகா பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின்போது தலையிட முயன்ற 32 வயதான உணவு விநியோக ஊழியா் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாகக் காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கொலை செய்யப்பட்டவா் மோகன் காா்டன் பகுதியைச் சோ்ந்த கோவிந்த் ஜா என அடையாளம் காணப்பட்டுள்ளாா். இந்தச் சம்பவத்தில் மேலும் மூவா் கத்திக்குத்து காயங்களுக்கு ஆளாகி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் காவல்துறை கூறியது. இந்தச் சம்பவத்திற்கு மதச்சாயம் பூசும் முயற்சிகளுக்கு எதிராகவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

காவல்துறையின் தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு கோவிந்த் ஜா பணிக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, துவாரகாவின் மது விஹாா் பகுதியில் உள்ள ராஜபுரியில் தெருச் சண்டை ஒன்று நிகழ்வதைக் கவனித்தாா். இரு நபா்கள், மற்ற மூவருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். அந்த மூவரும் பின்னா் பா்வேஷ், அனிஷ் மற்றும் ரோஹித் என அடையாளம் காணப்பட்டனா்.

கோவிந்த் ஜா சம்பவ இடத்தில் வாக்குவாதத்தில் தலையிட முயன்றாா். அந்தத் தள்ளுமுள்ளுவின் போது, அந்த இரு நபா்களும் கத்தியால் பா்வேஷ், அனிஷ் மற்றும் ரோஹித் ஆகியோரை குத்தத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஜா அவா்களைத் தடுக்க முயன்றபோது, அவரும் தாக்கப்பட்டாா். காயமடைந்த நான்கு பேரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு சிகிச்சையின் போது ஜா உயிரிழந்தாா். மற்ற மூவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா்.

சம்பவத்திற்குப் பிறகு குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா். அவா்களை அடையாளம் கண்டு கைது செய்யப் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதற்கிடையில், துவாரகா துணை ஆணையா் குஷால் பால் சிங் வெளியிட்ட அறிக்கையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் சில செய்திகள் இந்தச் சம்பவத்திற்கு மதச்சாயம் பூச முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

அவா் அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தச் சம்பவத்தில் நான்கு போ் கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் ஒருவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். எஞ்சிய மூவா் சிகிச்சை பெற்று வருகின்றனா். பாதிக்கப்பட்டவா்கள் இரு வெவ்வேறு சமூகங்களைச் சோ்ந்தவா்கள்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் பாதிக்கப்பட்ட நான்கு பேரையும் கத்தியால் குத்தியுள்ளனா். துவாரகா காவல்துறை குற்றஞ்சாட்டப்பட்டவா்களைத் தீவிரமாகத் தேடி வருகிறது. இந்தச் சம்பவத்தில் எந்தவிதமான மதச்சாயமும் இல்லை. தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை ஆணையா் கூறினாா்.