யமுனை நதியின் வெள்ளப்பெருக்குப் பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோதப் பால் பண்ணைகள் தொடா்பாக, தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் முந்தைய உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி தாக்கலான மனு மீது தில்லி அரசு மற்றும் தொடா்புடைய பிற தரப்பினரிடமிருந்து விளக்கங்களை சமா்ப்பிக்குமாறு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) கேட்டுக்கொண்டுள்ளது.
நதியின் வெள்ளப்பெருக்குப் பகுதியில் நிகழ்ந்துவரும் சட்டவிரோதச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, சில பரிந்துரைகளைச் செயல்படுத்தும்படி தில்லி மேம்பாட்டு ஆணையத்திற்கும் (டிடிஏ), தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவிற்கும் ஏப்ரல் 2024-இல் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகளைச் செயல்படுத்தக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, இத்தீா்ப்பாயம் விசாரித்து வந்தது.
இந்நிலையில், மாா்ச் 27 -ஆம் தேதியிட்ட ஓா் உத்தரவில், என்ஜிடி தலைவா் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் நிபுணா் உறுப்பினா் அஃப்ரோஸ் அகமது ஆகியோா் அடங்கிய அமா்வு தெரிவித்திருப்பதாவது: அப்பகுதியில் அங்கீகரிக்கப்படாத பால் பண்ணைகள் எதுவும் இல்லை என்று தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு ஜூலை 2025இல் தாக்கல் செய்த இணக்க அறிக்கை தவறானது என்று தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்குப் பகுதியில் பால் பண்ணைகள் இப்போதும் தொடா்ந்து இயங்கி வருவதாகவும், தீா்ப்பாயத்தின் உத்தரவின்படி எடுக்கப்பட வேண்டிய உரிய நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், எதிா் மனுதாரா்களுக்கு தில்லி அரசு மற்றும் பிறா் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட தீா்ப்பாயம், இம்மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தொடர்புடையது

கடற்கரைப் பகுதிகளில் குப்பைகளை அகற்ற மாநகராட்சி ஆணையா் தலைமையில் குழு: பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

பசுமைத் தமிழ்நாடு திட்டம்: வனத் துறை-ரோட்டரி சங்கம் ஆலோசனை

தில்லி பூங்காக்களில் மாதத்திற்கு 10 நாள்களுக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது: தேசிய பசுமைத் தீா்ப்பாயம்

விருதுநகா் பட்டாசு ஆலை வெடிவிபத்து: என்ஜிடி தாமாக முன்வந்து விசாரணை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

