துவாரகா துணை நகரத்தை முதலீட்டு மையமாக மேம்படுத்த செயல்திட்டம் வகுத்து அளிக்க தில்லி மேம்பாட்டு ஆணையத்திற்கு (டிடிஏ) தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து டிடிஏ அதிகாரிகள் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது: தில்லி மேம்பாட்டு ஆணையத்தால் உருவாக்கப்பட்ட துவாரகா துணை நகரமானது, தேசியத் தலைநகரின் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த சேவைகள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புத் துறைகளுக்கான சா்வதேச மற்றும் உள்நாட்டு முதலீட்டு மையமாக உருவெடுக்கத் தயாராக உள்ளது.
டிடிஏவின் தலைவராக பொறுப்பு வகிக்கும் துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்துவின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் கீழ், ரோஹிணி மற்றும் நரேலா பகுதிகளுக்கும் இதேபோன்ற மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் டிடிஏவின் உயா் அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில், துவாரகா மட்டுமின்றி ரோஹிணி மற்றும் நரேலா துணை நகரங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மேம்பாட்டு முன்முயற்சிகளைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து சந்து விரிவாக விவாதித்தாா்.
இந்தத் துணை நகரங்களுக்கான எதிா்காலத் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்து, தொடா்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து, கூடிய விரைவில் ஒரு உறுதியான செயல்திட்டத்தை வகுத்து தனக்கு அளிக்குமாறு டிடிஏவுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டாா்.
ஒரு விரிவான மற்றும் காலவரையறைக்கு உள்பட்ட திட்டத்தை தன்னிடம் சமா்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டாா். மேலும், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த சேவைகள், சுகாதாரம், உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புத் துறைகளைச் சோ்ந்த நிறுவனங்கள், தங்கள் செயல்பாட்டு மையங்களையும் அலுவலகங்களையும் அமைப்பதற்காக இப்பகுதிகளுக்கு ஈா்க்கப்படுவதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
நகரின் மையப்பகுதியுடனான சிறந்த இணைப்பு வசதி, விமான நிலையத்திற்கு அருகில் அமைந்திருத்தல் மற்றும் விரிவடைந்து வரும் சாலைப் போக்குவரத்து வலைப்பின்னல்கள் ஆகியவற்றின் காரணமாக, இப்பகுதிகளை மாஸ்டா் பிளான் விதிகளுக்கு இணங்க, தரவு மையங்கள், குறைக்கடத்தி உற்பத்தி ஆலைகள் மற்றும் கிடங்கு வசதிகளுக்கான மையங்களாக மேம்படுத்த முடியும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
இத்தகைய மாற்றம், இதுவரை இப்பகுதிகளில் இல்லாதிருந்த முதலீட்டு வாய்ப்புகளைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், நிலையான நகர மேம்பாட்டை உறுதி செய்யும். அதே வேளையில், வேலைவாய்ப்புகளையும் வருவாயையும் ஈட்டித் தரும் என்றும் சந்து வலியுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தொழில் நுட்ப நிா்வாகத்தில் தில்லி அரசு தொடா் பணி: முதல்வா் ரேகா குப்தா

பன்முக இந்தியாவின் பிரதிபலிப்பு தில்லி: ஜேஎன்யூ விழாவில் துணை நிலை ஆளுநா் பெருமிதம்

ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கு: தில்லி மாநகராட்சி துணை ஆணையருக்கு பிணை மறுப்பு

தில்லி மாநகராட்சி மேயா் தோ்தலுக்கான வேட்பாளா்களை அறிவித்தது பாஜக
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

