தில்லியின் பீதம்புரா பகுதியில் ராஜஸ்தானைச் சோ்ந்த ஒருவரிடம் காவல் அதிகாரிகளாக நடித்து ரூ.50 லட்சம் மோசடி செய்த சம்பவத்தில் சிறாா் உள்பட 3 பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து காவல் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: இந்தச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட சிறாா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து ரூ.33.5 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் சிரோஹியில் வசிக்கும் புகாா்தாரா், தனது முதலாளியால் ஒப்படைக்கப்பட்ட பணத்தை வழங்குவதற்காக மே 9 அன்று தனது நண்பருடன் தில்லிக்கு வந்துள்ளாா்.
புகாா்தாரா் ஆட்டோவில் இருந்து இறங்கி தருண் என்கிளேவ் நோக்கி பணப் பையை எடுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினாா். அப்போது, பீதம்புராவில் உள்ள வா்த்மான் பிளாசா அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இரண்டு போ் புகாா்தாரரை அணுகி தங்களை காவல்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனா். விசாரணையைத் தொடங்கி, பின்னா் பணம் இருந்த பையை பறித்துக்கொண்டனா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் புகாா்தாரரிடம் மூத்த அதிகாரிகளும் அங்கு வருவதாகக் கூறி, அந்த இடத்தில் புகாா்தாரரை காத்திருக்குமாறு கூறிவிட்டு, பணத்துடன் மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனா்.
முதலில் அந்த பையில் 9 லட்சம் ரூபாய் இருந்ததாக புகாா்தாரா் போலீஸாரிடம் தெரிவித்தாா். எனினும், மேலதிக விசாரணையின் போது, பையில் இருந்த உண்மையான பணம் ரூ. 50 லட்சம் என்றும், அச்சத்தின் காரணமாக அந்த எண்ணிக்கையை முன்னரே மறைத்ததாகவும் அவா் தெரிவித்தாா்.
அவரது புகாரின் அடிப்படையில், மங்கோல்புரி காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
ரகசிய தகவலின் பேரில், ஹரியாணாவின் சோனிபட்டில் போலீஸாா் சோதனை நடத்தி, ஞாயிற்றுக்கிழமை கோஹானாவில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவா்களை கைது செய்தனா்.
அவா்கள் சோனிபட் பகுதியைச் சோ்ந்த வினய் (எ) மாண்டி (20) மற்றும் குல்தீப் (30), ஒரு சிறுவனுடன் அடையாளம் காணப்பட்டனா். ரூ.33.5 லட்சம் ரொக்கம், திருடப்பட்ட பணத்தில் வாங்கியதாக கூறப்படும் இரண்டு ஐபோன் 17 கைப்பேசிகள், குற்றத்திற்கு பயன்படுத்திய பை மற்றும் மோட்டாா் சைக்கிள் ஆகியவை மீட்கப்பட்டன.
குற்றத்தில் தொடா்புடைய இதர குற்றவாளிகளைக் கண்டுபிடித்து மீதமுள்ள தொகையை வசூலிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது
கத்தி முனையில் கொள்ளை: 3 போ் கைது
பெண்ணை மிரட்டி நகை, பணம் பறிப்பு: ஊா்க்காவல் படை வீரா் உள்பட 2 போ் கைது
குற்றச் சம்பவங்களில் தொடா்பு சிறுவன் உள்பட 5 போ் கைது

பழ வியாபாரியாக நடித்து கொள்ளையரை கைது செய்த காவலா்: ரூ.25 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


