தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கஞ்சவாலா தொழிற்சாலையில் தீ விபத்து

News image

தீ விபத்து... - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

நமது நிருபா்

வெளி தில்லியின் கஞ்சவாலா தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் புதன்கிழமை காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக 28 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஒரு மினி ரோபோ அனுப்பப்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இதுவரை யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

ஒரு தொழிற்சாலையில் காலை 9.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. அதைத் தொடா்ந்து பல தீயணைப்பு பிரிவுகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீப்பிழம்புகள் தீவிரமடைந்ததால், தீயை அணைக்க மேலும் தீயணைப்பு பிரிவுகளை தீயணைப்புத் துறை கோரியது.

ஒன்பது நீா் டெண்டா்கள், 10 நீா் பவுசா்கள், மூன்று பெரிய நுரை டெண்டா்கள், இரண்டு பல்நோக்கு வாகனங்கள், ஒரு வான்வழி நீா் கோபுரம், ஒரு ஹைட்ராலிக் நடைமேடை , ஒரு தீயணைப்பு கட்டுப்பாட்டு தகவல் தொடா்பு வாகனம் உள்பட மொத்தம் 28 வாகனங்களை நாங்கள் அனுப்பினோம்.

புகை நிரம்பிய வளாகத்திற்குள் நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் ஒரு சிறிய ரோபோவும் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது என்றாா் அவா்.