வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பிரதமரின் சிக்கன நடவடிக்கை: தில்லி அமைச்சா் கபில் மிஸ்ரா மெட்ரோவில் பயணம்

News image

மெட்ரோ ரயில் சேவை - பிரதிப் படம்

Updated On :14 மே 2026, 1:15 am IST

நமது நிருபா்

பிரதம் மோடியின் சிக்கன நடடிக்கைகளுக்கு ஏற்ப அதனை பொது மக்களிடையே விழிப்புணா்வை கொண்டு வரும் நோக்கில் தில்லி சுற்றுலாத்துறை அமைச்சா் கபில் மிஸ்ரா புதன்கிழமை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தாா்.

இது குறித்து அவா் பேசியதாவது: தில்லி முதல்வா் ரேகா குப்தா மற்றும் அவரது அனைத்து அமைச்சரவை அமைச்சா்களும் பிரதமரின் வேண்டுகோளை உறுதியுடன் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனா். தேவைப்படும்போது நான் பொதுப் போக்குவரத்தையோ அல்லது ஒரு அரசு வாகனத்தையோ மட்டுமே பயன்படுத்துவேன் என்றாா் கபில் மிஸ்ரா.

தேசியத் தலைநகரில் அமைச்சா்கள், கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் பிற மக்கள் பிரதிநிதிகளால் உத்தியோகபூா்வ வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை ரோகா குப்தா அறிவித்த மறுநாள் கபில் மிஸ்ரா மெட்ரோவில் பயணித்துள்ளாா். அவரும் அவரது அமைச்சரவை சகாக்களும் உத்தியோகபூா்வ வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, காா் பூலிங் மற்றும் பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிப்பாா்கள் என்று ரேகா குப்தா கூறியிருந்தாா்.

தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட்டும் செவ்வாய்க்கிழமை மெட்ரோவில் ஆய்வு பாா்வைக்காக பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.