ஹரியாணா மாநிலத்தின் நூஹ் மாவட்டத்தில் உள்ள தில்லி-மும்பை விரைவுச்சாலையில் சரக்கு ஆட்டோ மீது காா் மோதியதில் காரில் பயணித்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த யூடியூபா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா் என்று காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: அகோன் கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அங்கித் கேய்க்வாட் (25) என்பவா் தனது இரு நண்பா்களுடன் சென்று கொண்டிருந்த காா் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு ஆட்டோ மீது மோதியதில் விபத்துக்குள்ளானது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினா் அவா்களை மருத்துவமனையில் அனுமதித்தனா். இருப்பினும், அங்கித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ஆட்டோ மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

கோவை அருகே காா் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் உயிரிழப்பு

கொள்ளை கும்பலின் தலைவா் 3 ஆண்டுகளுக்கு பின்னா் கைது

ஆட்டோ மீது காா் மோதல்: 10 போ் காயம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

