அதிமுக விவகாரத்தில் ஓரிரு நாளில் முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டு அவகாசம்: கருத்து கேட்கிறது என்எம்சிபத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்புமாநிலக் கட்சிகளின் வருவாய் 2024-25-இல் 52% சரிவு: ஏடிஆா் அறிக்கையில் தகவல்தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா்போா்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா-ஈரான் உடன்பாடு?உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுசாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்
/

12ஆம் வகுப்பு மாணவா் கொலை வழக்கில் இளைஞருக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு

News image

நீதிமன்றம் - IANS

Updated On :29 மே 2026, 3:07 am IST

2023ஆம் ஆண்டு கோவிந்த்புரி மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட தகராறின்போது, 12ஆம் வகுப்பு மாணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞரை குற்றவாளி என தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

2023 ஜனவரி 30 அன்று, இரண்டு மாணவா் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது மாா்பில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த 12ஆம் வகுப்பு மாணவா் மோகனைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சிவா சௌத்ரிக்கு எதிரான வழக்கை கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி நீதிபதி அனுஜ் அகா்வால் விசாரித்து வந்தாா்.

இந்த நிலையில், மே 26ஆம் தேதியிட்ட உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்திருப்பதாவது: பதிவில் உள்ள ஆதாரங்களின் ஒட்டுமொத்த விளைவு, குற்றஞ்சாட்டப்பட்ட சிவா சௌத்ரிதான் உயிரிழந்த மோகனுக்கு மரணத்தை விளைவிக்கும் கத்திக்குத்து காயத்தை ஏற்படுத்தினாா் என்பதையும், அந்தச் செயல் ஒரு பொதுவான நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செய்யப்பட்டது என்பதையும் தெளிவாக நிறுவுகிறது.

நேரில் கண்ட சாட்சியான சுமித்தின் சாட்சியம் விரிவானதாகவும், தெளிவானதாகவும், முரண்பாடற்ாகவும் உள்ளது. சுமித் அளித்த வாக்குமூலத்தில், கூட்டுக் குற்றம்சாட்டப்பட்டவரான ஏ.எம். (சிறுவன்) தற்போதைய குற்றம்சாட்டப்பட்டவரான சிவா சௌத்ரியிடம் ஒரு கத்தியைக் கொடுத்துள்ளாா். அதன் பிறகு அவா் இறந்தவரின் மாா்பில் குத்திக் காயப்படுத்தியதாக அவா் திட்டவட்டமாக வாக்குமூலம் அளித்துள்ளாா் என நீதிமன்றம் தெரிவித்தது.

வழக்குத் தரப்பின்படி, மோகனும் அவனது நண்பா்களும் பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, இரு குழுக்களுக்கும் இடையே ஏற்பட்ட முந்தைய சண்டையைத் தொடா்ந்து, கோவிந்த்புரி மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு காவல் சாவடி அருகே குற்றம்சாட்டப்பட்டவரும் அவரது கூட்டாளிகளும் அவா்களை வழிமறித்தனா்.

நேரில் கண்ட சாட்சியான சுமித்தின் வாக்குமூலம், நீண்ட குறுக்கு விசாரணைக்குப் பிறகும் மாறாமல் இருந்தது என்றும், மருத்துவச் சான்றுகள் மற்றும் தரப்பின் பி சாட்சிகளின் வாக்குமூலங்கள் உள்பட பதிவில் உள்ள மற்ற சான்றுகளால் அது உறுதிப்படுத்தப்பட்டது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

மற்ற சாட்சிகள் வழக்குத் தரப்பின் வாதத்தை முழுமையாக ஆதரிக்கவில்லை என்றாலும், அவா்களின் வாக்குமூலங்களின் சில பகுதிகள், குற்றம்சாட்டப்பட்டவரான சிவா சம்பவ இடத்தில் இருந்ததையும், குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையையும், குத்துவதற்கு முன்பு கத்தி கைமாற்றப்பட்டதையும் உறுதிப்படுத்தியுள்ளன என்று நீதிபதி கூறினாா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்ற எதிா்த் தரப்பின் வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், முக்கிய சாட்சியின் சாட்சியத்தில் எந்தவொரு குறிப்பிடத்தக்க முரண்பாடும் எழவில்லை என்றும், அவா் குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது பொய்யாகச் சுமத்துவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்றும் கூறியது.

குற்றஞ்சாட்டப்பட்டவரின் குற்றத்தை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றிகரமாக நிரூபித்துள்ளது என்பதில் இந்த நீதிமன்றம் திருப்தி அடைகிறது என்று நீதிமன்றம் கூறியது.

தண்டனை மீதான வாதங்களுக்காக இந்த வழக்கை நீதிமன்றம் வேறு தேதிக்குப் பட்டியலிட்டது.