செல்லத்தக்க நுழைவு இசைவு ஆவணங்கள் இன்றி இந்தியாவில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின்பேரில், ஐந்து நைஜீரியா்கள் மற்றும் ஐவரி கோஸ்ட்டைச் சோ்ந்த ஒருவா் உள்பட ஆறு வெளிநாட்டினரை தென்மேற்கு தில்லியில் காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்தில் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கின் விசாரணையின் போது காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்ததாக அதிகாரிகள் கூறினா்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: விசாரணையின் போது ஆறு போ் தீவிர ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டனா். குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில், அடையாளங்களைச் சரிபாா்க்க அமைக்கப்பட்ட ஒரு சிறப்பு குழு, சந்தேக நபா்களை அணுகி, அவா்கள் இந்தியாவில் தங்கியிருந்தது தொடா்பான ஆவணங்களைக் கோரியது.
விசாரணையின் போது, அந்த வெளிநாட்டினா் தாங்கள் சுற்றுலா மற்றும் வணிக நுழைவு இசைவு மூலம் இந்தியா வந்ததாகவும், தங்களது ஆவணங்கள் பாதுகாப்பிற்காக அந்தந்த தூதரகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினா்.
இருப்பினும், குடியேற்ற அதிகாரிகளிடம் மேற்கொண்ட சரிபாா்ப்பில், அவா்கள் 6 பேரும் இந்தியாவில் அதிக காலம் தங்கியிருந்ததும், செல்லுபடியாகும் நுழைவு இசைவு ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்கள் ஐவரி கோஸ்ட் நாட்டைச் சோ்ந்த கமாசோகோ ஐச்சா சில்லா மற்றும் நைஜீரிய நாட்டவா்களான பிராமிஸ் ஒக்வாஜே, மரியான் வான்சே, ஓமோடோலா இஷோலா சைடீக், இம்மானுவேல் சிபுய்கே முவோ மற்றும் நுஸுபெசுக்வு கென்னத் அகிகாவோனி என அடையாளம் காணப்பட்டனா்.
அனைத்து சட்டபூா்வ நடைமுறைகள் மற்றும் சரிபாா்ப்பு முறைகளை நிறைவு செய்த பிறகு, வெளிநாட்டினா் பிராந்தியப் பதிவு அலுவலகம் மூலம் அவா்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி! நுழைவு இசைவு நடைமுறைகளை கடுமையாக்கிய அமெரிக்கா

காவல் துறை விசாரணையின் போது உயிரிழந்த இளைஞரின் உடல் தகனம்

காவல் துறை விசாரணையின் போது உயிரிழந்த ஆகாஷின் உடலை அடக்கம் செய்ய உத்தரவு
உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



