நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

போலி கைப்பேசி உதிரிபாகங்கள் தயாரித்த இருவா் கைது

மத்திய மற்றும் மேற்கு தில்லியில் போலி கைப்பேசி உதிரிபாகங்கள் தயாரித்து, பொட்டலமிடும் கும்பலைச் சோ்ந்த இருவரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 3:00 am IST

மத்திய மற்றும் மேற்கு தில்லியில் போலி கைப்பேசி உதிரிபாகங்கள் தயாரித்து, பொட்டலமிடும் கும்பலைச் சோ்ந்த இருவரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயா்களில் போலி கைப்பேசி தொடா்பான பொருட்களைப் பொட்டலமிட்டு சந்தையில் விற்பனை செய்வதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், குற்றப்பிரிவின் ஒரு குழு சனிக்கிழமை தில்லியின் பல இடங்களில் ஒரு பெரும் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்தச் சோதனைகளின் போது, கரோல் பாக் பகுதியின் ரெகா்புரா பகுதியில் அமைந்துள்ள இரண்டு கிடங்குகள் சீல் வைக்கப்பட்டன. அங்கு போலிப் பொருட்கள் பொட்டலமிடப்பட்டு, முத்திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

போலிப் பொருட்களுக்கான பொட்டலப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மோதி நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையையும் காவல்துறை சீல் வைத்தது.

இந்த நடவடிக்கையின் போது, ஒரு அச்சகம் மற்றும் மூன்று சேமிப்புக் கிடங்குகளை காவல்துறை கண்டறிந்தது. அங்கு இயந்திரங்களைப் பயன்படுத்தி போலிப் பொருட்கள் பொட்டலமிடப்பட்டு சந்தையில் விற்கப்பட்டு வந்தன. இந்தச் சோதனைகளின் போது, பெருமளவிலான போலிப் பொருட்களும் பொட்டலப் பொருட்களும் மீட்கப்பட்டன.

உற்பத்தி மற்றும் பொட்டலமிடல் செயல்முறையில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் எட்டு இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.